உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1007

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

534 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை பொதுவில்விலை யிடுமகளிர் பத்மக்க ரந்தழுவி யொக்கத்து வண்டமளி புகஇணைய வரிபரவு நச்சுக்க ருங்கயல்கள் செக்கச்சிவந்தமுது பொதியுமொழி பதறஅள கக்கற்றை யுங்குலைய முத்தத்து டன்கருணை தந்துமேல்வீழ். புதுமைதரு கலவிவலை யிற்பட்ட முந்தியுயிர் தட்டுப்படுந்திமிர புணரியுத தியில்மறுகி மட்டற்ற இந்திரிய சட்டைக்கு ரம்பையழி பொழுதினிலும் அருள்முருக சுத்தக்கொ டுங்கிரியி னிர்த்தச் சரன்களைம றந்திடேனே. திதிதிதிதி திதிதிதிதி தித்தித்தி திந்திதிதி தத்தத்த தந்ததத தெதததெத தெதததெத தெத்தெத்த தெந்ததெத திக்கட்டி கண்டிகட ஜெகணகென கெனஜெகுத தெத்தித்ரி யந்திரித தக்கத்த குந்தகுர்த திந்திதீதோ. திகுடதிகு தொகுடதொகு திக்கட்டி கண்டிகட டக்கட்ட கண்டகட டிடிடுடுடு டிடிடுடுடு டிக்கட்டி கண்டிகட டுட்டுட்டு டுனன்டுடுடு திகுகுதிகு திகுகுகுகு திக்குத்தி குந்திகுகு குக்குக்கு குங்குகுகு என்றுதாளம்,

  • இத்தலத்தில் அருணகிரியார்க்கு முருகவேள் நிர்த்த தரிசனம் தந்த வரலாறு பெறப்படும்.