உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1008

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - கொடுங்குன்றம் திருப்புகழ் உரை 535 பொதுவில் (நின்று உடலை) விலைக்கு விற்கும் மகளிருடைய தாமரையன்ன கரங்களைத் தழுவி, ஒரு சேர நெகிழ்ந்து, படுக்கையிற் புக்குச் சேர, ஒழுங்கான ரேகைகள் பரந்துள்ள விடமுள்ள கரிய கயல்மீன் போன்ற கண்கள் செக்கச்சிவந் து, அமுதம் கொண்ட சொற்கள் கலங்கிவர, கூந்தற்கட்டு குலைந்து அவிழ, முத்தமிடுவதுடன் அன்பு பாராட்டி மேலே விழுகின்ற அதிசயத்தைத் தரும் புணர்ச்சி வலையிலே பட்டு அழுந்தி உயிர் தடையுண்டு அலைச்சல் உறும் இருள் சேர்ந்த பெருங் கடலில் கலக்கம் உற்று, அளவு கடந்த இந்திரியம் (சுக்கிலம்) தங்கும் மாநுடச்சட்டையாம் இந்தக் கூடு (உடல்) அழிந்து போகும் பொழுதிலும் அருள்பாலிக்கும் முருகனே, (அல்லது - அருள் புரிவாயாக முருகனே) பரிசுத்த தலமான கொடுங்கிரியில் (பிரான்மலையில்) நீ காட்சி தந்தருளிய (உனது) நிர்த்த பாதங்களை நான் மறக்கமாட்டேன் (அல்லது - அருள் நிறை முருகனே! குரம்பை அழிகின்றபோதும் கொடுங்கிரியில் நீ காட்சி தந்தருளிய நிர்த்தச் சரண்களை மறவேன் - எனலுமாம்.) S S S S S S S S S S S S T T T T T T குக்குக்கு குங்குகுகு என்று தாளம் .