உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1017

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

544 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை 407. மாதர் மேலுள்ள மயல் அற தனதனன தந்த தானன, தனதனன தந்த தானன தனதனன தந்த தானன தனதான கடினதட கும்ப நேரென வளருமிரு கொங்கை மேல்விழு கலவிதரு கின்ற மாதரொ டுறவாடிக் கனவளக_பந்தி யாகிய நிழல்தணிலி ருந்து தேனுமிழ் கனியிதழை மென்று தாடனை செயலாலே, துடியிடைது. டங்க வாள்விழி குழைபொரநி ரம்ப முடிய துகில்நெகிழ "வண்டு கோகில மயில்காடை தொணியெழவி ழைந்து கூரிய கொடுநகமி சைந்து தோள்மிசை துயில்வச இன்ப மேவுத லொழிவேனோ, இடிமுரச றைந்து பூசல்செய்_அசுரர்கள்மு றிந்து துருளெழ எழுகடல்ப யந்து கோவென அதிகோப. எமபடரு மென்செய் வோமென நடுநடுந டுங்க வேல்விடு இரணமுக tசண்ட மாருத மயிலோனே, வடிவுடைய +அம்பி காபதி கணபதிசி றந்து வாழ்தட வயலிநகர் குன்ற மாநக ருறைவோனே. வகைவகைபு கழந்து வாசவன் அரிபிரமர் சந்த்ர ஆரியர் வழிபடுதல் கண்டு வாழ்வருள் பெருமாளே. (3) " வண்டு, கோகிலம், முதலிய புட்குரல் - பாட்டு 197 t சண்டமாருத மயில் :- விசைகொண்ட வாகனப் பீலியின் கொத்து அசைபடு கால் பட்டசைந்தது மேரு' கந். அலங்.11.

  1. அம்பிகாபதி - வயலூர் சிவபெருமானுக்கு அக்கினிசுரர் என்று பெயர். கணபதிக்குப் பொய்யாக் கணபதி என்று பெயர் 910 ஆம் பாட்டு

ஈற்றடியில். "அருளிற் சீர் பொயாத கணபதி திருவக்கிசன் வாழும் வயலியின் அழகுக் கோயில் மீதில் மருவிய பெருமாளே." என வருதல் காண்க.