உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1020

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - குன்றக்குடி) திருப்புகழ் உரை 547 408 (நேச ஆசார ஆடம்பர மட்டைகள்) அன்பு, ஆசாரம் ஆடம்பரம் இவை பொருந்திய பயனிலிகள், பேசாமலிருந்து கொண்டே பிறரைப் பழிக்கின்ற (கள்ள) வீணிகள், கீழ்க் குலத்து இழிந்தோர்களோடும் கூடப் பழகிப் பறிக்கின்ற பொருளாலே (நீயே நானே என்றொரு சத்தியம்) உன்மேல் ஆணை, என்மேல் ஆணை என்று ஆணையிட்டு வாய் கூசாமல் பேசுகின்ற வஞ்சனை எண்ணத்தினர், எதிரிலேயே நின்று தளுக்கு, ஆடம்பரஞ் செய்பவர்கள், யார் மேலும் ஆசையாகிய பந்தத்தைக் காட்டித் தொந்தரவு செய்து மேல் வீழ்பவரிடத்தே சண்டித்தனம் செய்பவர்கள் (பிடிவாதம் பிடிப்பவர்கள்), நல்ல பேரழகுடனே மேலே தோலெங்கும் மினுக்குபவர்கள், அதிக மோகம் - வைக்கலாகாதா! ஆவேசம் தருகின்றது இப்பொழுது - (காம மயக்க ஆவேசம் இப்போது உண்டாகின்றது) ஒகோ! வா! வா' (வாரும், வாரும்) என்று கூறி வஞ்சிப்பவர்களுடைய ஆகாத (பொருந்தாத உண்மையல்லாத) மோகந்தரும் வீணர்களின் கிட்டேயும் (அருகிலும்) உறவு சம்பந்தம் ஆமோ! உறவு கூடாது என்றபடி பேசாமல் (யாருக்கும் தெரியாமல்) போய் நின்று உறியிலிருந்த தயிரைவாயால் ஆஆஆ என்று குடித்து, (அருள் நீள் பேராலே) அருள், பேர் அளவுக்கு மாத்திரம், பெரிதும் வைத்து - (உண்மையில் அருளே இலாது வஞ்சனையுடன்) கம்சன் அனுப்பி எதிரில் வந்த தூதாகிய