உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1022

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - குன்றக்குடி) திருப்புகழ் உரை 549 பெரிய வாயைக்கொண்ட வேதாளம் (பூதனை என்னும் பேய்), பகடு (பரந்த) (வியக்கத்தக்க) பகுவிாய் (பிளந்தவாயைக் கொண்ட) பேரிi மானாள் (பெண்ணும்) சரளத்தொடு எளிதாகவே, பேய் ரூப மெடுத்தவளாகிய பூதகி என்பவளின் (வஞ்சனைப் போரை) செயித்து எதிர் நின்றவனாகிய கண்ணபிரானது (திருமாலின்) மருக்னே! குற்றத்திலே ஊடாடி ஆடுகின்ற பகைவர்களையும், பகைத்து நின்ற சூரர்கள்ையும் வ்லிய போரில் அழித்த மகா குரனே உலகம் முழுமையும் அருள்பாலித்து விளங்கும் முருகனே! வானாடு முதலான ஏழு மியும் புகழ்பெற்று விளங்குவதும் தேன்ாறு என்னும் நதி சூழ்ந்துள்ளதுமான, பரிசுத்த ம்லைத்த்லத் து மயிலனே' அல்லது துங்கமலைப்பதி மாயூரா - (துங்க மாயூரமலைப்பதியாய்) (மயூரகிரித் தலத்து உறைபவனே) வாழ்வு நிறைந்த குன்றக்குடி என்னும் தலத்தில் விளங்கியருளும் ப்ெருமாள்ே. (மோகா வம்பிகள் கிட்டிலும் உறவாமோ) 409 பிறர் (ஞானியர் அல்லாத பிறர்) புகழும் இனியசொல்லைப் பயிலும் இளந்தை (பால்ய) பருவமுள்ள மன்மதனுடைய கையில் உள்ள வில்லாலே பிறவியினால் உண்டாகின்ற சிக்கல்கள் பெருகும் பொய்யான பெரிய வழியில் சென்று அப்பொய்க் குணத்தையே பொருந்தி. (அதனால்) சிறுமை அடைந்து, பெருமை சுருங்கி, செயல்கள் அழிந்து, அற்பகுணமுள்ள். மாதர்களின் கண் கயலை (கயல்மீன் போன்ற கண்ணை) விரும்பி ஈடுபட்டு (அதனாற்) சிலசில அவமானங்களை அடையலாமா! கர்வமும், வஞ்சனை எண்ணமும், சூதும் கொண்டு எட்டுத் திக்கிலும் எதிர்த்து சண்டைக்கு என்று எழுந்த சூரன்.