பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1037

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

564 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை வள்ளியூர் (இது திருநெல்வேலிக்குத் தெற்கு 19மைலில் உள்ள நாங்குநேரிக்குத் தென் கிழக்கு 9 மைல். கோயில் மலையடி வாரத்தில் இருக்கிறது. சுப்பிரமணிய சுவாமி சந்நிதி விசேட மானது. கோயிலுக்கருகில் அழகிய இரண்டு திருக்குளங்கள் உள்ளன. சித்திரை மாத உற்சவத்தில் அநேகங் காவடிகள் வருகின்றன. மலைவலம் ; மைல் இருக்கும்.) 417. உடல்மாயை ஒழிய தய்ய தானன தனதான அல்லில் நேருமி னதுதானும் அல்ல தாகிய உடல்மாயை, கல்லி னேரஅ வழிதோறுங் கையு நானுமு லையலாமோ, சொல்லி நேர்படு முதுசூரர். தொய்ய ஆர்கெட விடும்வேலா! வல்லி மாரிரு புறமாக வள்ளியூருறை பெருமாளே. (முன் பக்கத் தொடர்ச்சி) காதலைக் காட்டிப் பேசி நின்ற பொழுது, வள்ளியின் தாதை (வேடராசன்) ஏனைய வேடர்களோடு வரக்கண்ட உடனே வேங்கை மரத்தின் உருவமெடுத்து நின்றார். வேங்கையின் உருவமாகி வேற்படை வீரன் நின்றான்." திடீரென வேங்கை மரம் ஒன்று அங்கு இருப்பதைக் கண்டு வேடர்கள் "விம்மிதம்" அடைந்தார்கள். வேடராசன் இம் மரத்தை வெட்டவேண்டாம் இது வள்ளிக்குத் துணையாயிருக்கும் என்று கூறிச் சென்றான்.