பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1038

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - வள்ளியூர் திருப்புகழ் உரை 565 417 இரவில் காணப்படும் மின்னல் அதுதானும் அன்று என்று சொல்லும்படியான (மின்னல் நிலைத்து நிற்கும் அந்நேரம் கூட நிலைத்து நிற்காத) உடல் ஒருமாயை. கல்லுக்கு ஒப்பான அந்த மாயை வாழ்க்கை வழியெல்லாம் (கல்லும் முள்ளும் நிறைந்த அந்த வாழ்க்கை வழியிலே) கையும் (என் ஒழுக்க நிலையும்) நானும் அழியலாமா!. அல்லது கையும் (கைத்தல் பூணும்) நைந்து வருந்துகின்ற நான் நிலைகுலையலாமா! (அழியலாமா)! (தத்தம் வீரப்ரதாபங்களைச்) சொல்லிக்கொண்டு எதிர்த்து வந்த பெரிய சூரர்கள் தொய்ய (சோர்வு அடைய, அழிய) வும், அவர்கள் ஊர் பாழ்படவும் செலுத்தின வேலனே! கொடியனைய மாதர்கள் (தேவசேனை - வள்ளி) இருபுறமாக வள்ளியூரில் வீற்றிருக்கின்ற பெருமாளே! (நான் உலையலாமோ) (முன் பக்கத் தொடர்ச்சி) 'ஏந்திழை அஞ்சேல், நன்றிவண் வைகுதி நாண்மலர்வேங்கை யின்றுணையாயிவண் எய்தியது என்னாக் குன்றுவன் வேடர் குழாத்தொடு போனான்" - என்பது (கந்த புராணம் - வள்ளி திருமணம் 81) S வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்" (அப்பர் 6 - 23 - 1) "வேண்டிய போதடியர் வேண்டிய போகமது வேண்ட வெறாதுதவு பெருமாளே." (திருப்புகழ் 246-47) "வேண்ட முழுதுந் தருவோய் நீ" - (திருவாசகம் - குழைத்த 6)