பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1050

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - கதிர்காமம்) திருப்புகழ் உரை 577

  • .

தமது உடலில் இடது பாகத்தில் ஒப்பற்ற மரகதமயிலுக்கு மேலான அழகு உள்ள ஏழை (பார்வதிக்கு) இடம் கண்டவர் இடம் தந்தவரான சிவபிரானது செல்வனே! (அல்லது, இடங். கொண்டு ஒப்பற்ற மரகத மயில்மேல் வடிவுள்ள வாழ்வே! ஏழைக் கிடங்கண்டவர் வாழ்வே) Sஅடியேன் இனிமையான (வணக்க) மொழிகளைக் கூறினாலும், மதமொழி (ஆணவம்) காட்டும் பேச்சுக்களைப் பேசினாலும் (இந்த ஏழிையினிடத்தில் இரக்கம் (கருணை) காட்டும் பெருமாளே! (என் அவா விக்கினம் பொன்றிடுமோ தான்ற 423 போர் முகத்துக்கு என்று கூர்மை பிறங்கும் வேல் போன்ற கண்கள் புரள, ரவிக்கை அணிந்த கொங்கைகள் அசைய, வீதியில் மயில் உலவுவது போல உலாவியே (முன் பக்கத் தொடர்ச்சி) விழுந்ததுளி என்றெடுத்துப் பாடியவர்.நாவில் வேல்கொடு பொறித்த சதுரா" - எனக் குறிக்கின்றார் வரகவி மார்க்கசகாயதேவர் (திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழ் - ச்ப்பாணி - 4). முருகனைப் பாடமாட்டேன் என்று முரட்டுத்தனம் செய்தபடியால் பொய்யாமொழியாரை முரட்டுப் புலவன்" என்கின்றார் அருணகிரியார்:. முற்பட்ட முரட்டுப் புலவனை முட்டைப் பெயர் செப்பிக் கவிபெறு பெருமாளே - திருப்புகழ் 1171. நற்றாயிரங்கல் துறையிற் பாடினரென்பது. 'நற்றாயிற் காட்டிப் புகழ்கலை கற்றார் சொற்கேட்கத் தனி வழி வருவோனே" என்னும் திருப்புகழாலும் (1022) அறியலாம்.

  1. ஏழை - பார்வதி எருதேறி ஏழையுடனே - சம்பந்தர் 285.2

ஏழை பங்காளனையே பாடேலோ ரெம்பாவாய்'- திருவாசகம். S இந்தத் திருப்புகழின் ஈற்றடி மனப்பாடஞ் செய்யத் தக்க அருமை --MHھے۔