பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1054

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று -கதிர்காமம் திருப்புகழ் உரை 581 424 நாணற் காட்டின் இடையே தோன்றினாய், வலிவுடன் குதித்து, சாமர்த்தியமாய் எதிர்த்து வந்த சூரனைச் சரியாய் நடந்தவரையில் சும்மா விட்டிருந்தாய், சரி தப்பினபின் அடுத்து நெருங்கினாய், பிளந்தாய் உடலை இருகூறு ஆகும்படி தலையுடன் மார்பையும் அறுத்துக் குவித்தாய், கொன்றாய் பல மாலைகளை விருதாகப் பெற்றாய், வெற்றிக்கு அடையாளமாக(ப் பெற்றாய்) சிறகை உடைய சேவல் (ஒன்றைப்) பெற்றாய்; வெற்றியை அடைந்தாய் - அத்தகைய நீ (உனது) அழகிய தாமரையன்ன திருவடியைத் தந்தருளுக. திரிபுரத்திலிருந்த வரப்ரசாதிகள், போருக்குத் தயாராக வந்தவர்கள், (அல்லது) அம்பின் கூட்டத்தைக் கொண்டவர். கள், சண்டை செய்வதற்கு எதிர்த்து வந்தபோது பொறுமையுடன் இருந்தார், (போர்க்கோலத்தைத்) தாங்கினார், (பின்பு) சிரித்தார், (திரிபுரத்தை எரித்தார், பொரிபடச் செய்தார் நெற்றிக் கண்ணால், பின்பு, யானையின் தோலை உரித்தார், அதை விரித்தார், அதை அணிந்து கொண்டார், பிரமனாதிய தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கித் தம்மீது அம்பு எய்யும் கருத்துடன் தென்றற்காற்றாகிய தேர்மீது ஊர்ந்து வந்த மனமதனாரைக- h கரியலங்கார மாக்கினார் (சாம்பலாக்கினார்) ri அத்தகைய சிவபிரானுடைய கண்ணுக்குப் பிரியமான முத்தே கதிர்காமம் என்னும் தலத்திற் பொருந்தி வீற்றிருக்கும் முருகனே! (திருத்தாமரைத் தாள் அருள்வாயே)