உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1057

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

584 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை 426. திருவடியை மறவேன் என்பது தானதன தத்தத்த தானதன தத்தத்த தானதன தத்தத்த தனதான பாரவித முத்தப்ப மரபுள கப்பொற்ப யோதர நெருக்குற்ற இடையாலே. பாகளவு தித்தித்த சீதமொழி யிற்புட்ப பாணவிழி யிற்பொத்தி விடுமாதர், காரணி குழற்கற்றை மேல்மகர மொப்பித்த காதில்முக வட்டத்தி லதிமோக o காமுக ணகப்பட்ட வாசையைம றப்பித்த கால்களைம றக்கைக்கும் வருமோதான்; t தேரிரவி யுட்கிப்பு காமுதுபு ரத்திற்றெ சாசிரனை மர்த்தித்த அரிமாயன். சீர்மருக அத்யுக்ர யானைபடும் : ரத்நத்ரி கோணசயி லத்துக்ர கதிர்காம; வீரபுன வெற்பிற்க லாபியெயி னச்சிக்கு மேகலை யிடைக்கொத்தி னிருதாளின். S வேரிமழை யிற் பச்சை வேயிலரு ணக்கற்றை வேல்களி லகப்பட்ட பெருமாளே. (9) இது சுவாமிகளின் வரலாற்றைக் குறிக்கும். t ராவணனுடைய ஆணைக்கு அஞ்சிச் சூரியன் இலங்கை நகருள் புகமுடியாதிருந்தான். "பகலவன்மீ தியங்காமைக் காத்த பதியோன்" - சம்பந்தர் 3 -10 -11 "பகலவன்மீ தியங்காத இலங்கை" - பெரிய திருமொழி 7-8-7 "ஆதவன் நிகளில் இரதமும் விடுக்கா நகர்" - திருப்புகழ் 118.4 "ஞாயிறு விலகிய புரிசை இலங்கை" - திருப்புகழ் 749

  1. "கண்மணி வரன்றிக் குரைகடல் ஒதம்

நித்திலங் கொழிக்கும் கோணமாமலை" - சம்பந்தர் . 3-123-1. S வேரி மழை - வாசனை தங்கிய மேகம் போன்ற குழல். பச்சை வேய் - பசிய மூங்கிலை யொத்த தோள்.