பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1065

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

592 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை பதிகள்பல வாயி ரங்கள் மலைகள் வெகு கோடி நின்ற பதமடியர் காண வந்த கதிர்காமா: அரவுபிறை பூளை தும்பை விலுவமொடு துார்வை கொன்றை யணிவர் சடை யாளர் தந்த முருகோனே. அரகரசி வாய சம்பு குருபரகு மார நம்பு மடியர்தமை யாள வந்த பெருமாளே. (13) அருக்கொணாமலை (இதுவும் ஈழநாட்டிலுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து 12 மைல்; கீரிமலை என்று வழங்கும்.) 431. மாதர்மேலுளமயக்கற தனத்த தானன தனத்த தாணன தனதத தானன தனதுத தானன தனத்த தானன தனத்த தானன தனதான தொடுத்த வாளென விழித்து மார்முலை யசைத்து மேகலை மறைத்து முடிகள் துடித்து நேர்கலை நெகிழ்த்து மாவியல் கொளுமாதர். சுகித்த ஹாவென நகைத்து மேல்விழ முடித்த வார்குழல் விரித்து மேவிதழ் † ■_ _轟 ங் 圖 睡_暫 துவர்த்த வாய்சுரு ளடக்கி மால்கொடு வழியேபோய்ப், படுத்த பாயலி லனைத்து மாமுலை பிடித்து மார்பொடு மழுத்தி வாயிதழ் கடித்து நாணம தழித்த பாவிகள் வலையாலே. பலித்து நோய்பிணி கிடத்து பாய்மிசை வெளுத்து வாய்களு மலத்தி னாயென பசித்து தாகமு மெடுத்தி டாவுயி ருழல்வேனோ,

  • துவர்த்த சிவந்த