உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1066

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று -அடுக்-மலை திருப்புகழ் உரை 593 தலங்கள் பல ஆயிரக்கணக்கானவை, மலைகள் வெகுகோடி கணக்கானவ்ை - இவைதமில் நின்ற உனது திருவடிகளை அடியார்கள் காணும் பொருட்டு எழுந்தருளி வந்துள்ள கதிர்காமத் தலத்தனே! பாம்பு, பிறை, பூளைப்பூ தும்பைமலர், வில்வம், அறுகு கொன்றை அணிபவராம் சடையாளர் (சிவபிரான்) தந்த முருகனே! குழந்தையே) அரகர, சிவாய, சம்பு, குருபர, குமார, நம்பும் அடியார்களை ஆண்டருள வந்த பெருமாளே! (வேளைகண்டு கடுகிவரவேணும் எந்தன் முனமேதான்) அருக்கொணாமலை 431 செலுத்தப்பட்ட வாளாயுத மென்று சொல்லும்படி விழித்து, மார்பிலுள்ள கொங்கையை அசைத்து, மேகல்ை (புடைவை) கொண்டு மறைத்து மூடும் மாதர்கள், துடித்து எதிரே புடைவையைத் தளர்த்தி நல்லொழுக்கத்தைப் பறிகொள்கின்ற மாதர்கள், சுகித் து, ஆகா என்று நகைத்து மேலே விழ, முடித்திருந்த நீண்ட கூந்தலை விரித்து, இதழ்சிவக்கும்படி வாயில் (வெற்றிலைச்) சுருளை அடக்கிக், காம ஆசையைக் கொடுக்கின்ற அந்த வழியிலேயே போய்ப் - படுத்த படுக்கையில் அணைத்து, அழகிய கொங்கையைப் பிடித்து மார்போடும் அழுத்தி, வாயிதழைக் கடித்து, நாணத்தை அழித்த (பொதும்களிராம்) பாவிக்ளின் வலையாலே உண்டான நோய் பிணியாற் படுக்கை யுற்று, பாயில் விழுந்து கிடப்பதால் உடல் வெளுத்து, வாய்களும் மலம் தின்னும் நாயென ஆக, பசியுற்றும் தாகம் உற்றும் எடுத்திட்ட உயிருடன் திரிவேன்ோ!