உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1067

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

594 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை

  • வெடுத்த தாடகை சினத்தை யோர்கனை

விடுத்து யாகமும் நடத்தி யேயொரு மிகுத்த வார்சிலை முறித்த மாயவன் மருகோனே. விதித்து ஞாலம தளித்த வேதனை யதிர்த்து வோர்முடி கரத்து லாயணல் விழித்து காமனை யெரித்த தாதையர் குருநாதா, அடுத்த t ஆயிர விடப்ப ணாமுடி நடுக்க மாமலை பிளக்க வேகவ டரக்கர் மாமுடி பதைக்க வேபொரு மயில்வீரா.

  1. அறத்தில் வாழுமை S சிறக்க வேயறு

முகத்தி னோடணி குறத்தி யாணையொ டருக்கொ ணாமலை தருக்கு லாவிய பெருமாளே. (1) (இதுவும் ஈழநாட்டிலுள்ளது. இலங்கைத் தீவில் வட கி. ழ்ப்பாகத்தில் உள்ள கடற்கரைத் தலம். தட்சிண கைலாசம் எனவும் பெயர் பெறும் திருஞானசம்பந்த சுவாமிகளுடைய பாடல் பெற்றது. இதற்குத் தலபுராண முண்டு.)

  • தாம் செய்யும் யாகத்தை ராட்சசர்கள் தடுக்கிறார்களென்றும் அவர்களை அழிக்க ரீராமரைத் தம்முடன் அனுப்பவேண்டுமென்றும் விசுவாமித்திர முனிவர் தசரத மகாராசாவைக் கேட்க ரீராமரும் லட்சுமணரும் முதிவருடன் அனுப்பப்பட்டனர். அவர்கள் போகும் வழியில் தாடகை ஆiராமரை எதிர்க்க அவரது பாணத்தால் அவள் மாண்டாள். பின்னர் ஆiராமர் முநிவரது வேள்வியைக் காத்தனர். யாகத்துக்கு இடையூறுசெய்த கபாகுவைக் கொன்றனர். மாரீசனை அப்புறப்படுத்தினர்.

பின்னர் ஆiராமர் விசுவாமித்திரருடன் மிதிலைக்குச் சென்று அங்கே சனகமகாராசர் வைத்திருந்த சிவதனுசை முறித்து சனகமகாராசனுக்குப் பூமிதேவி அளித்த வைதேகி (சீதையைத் திருமணம் செய்தனர். (அடுத்த பக்கம் பார்க்க) 34