பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1068

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று -அடுக்-மலை திருப்புகழ் உரை 595 வெடுவெடுத்து (கோபத்தாற் படபடப்புடன்) வந்த தாடகையின் கோபத்தை ஓர் அம்பு விடுத்து (அடக்கியும்) யாகத்தை நடத்தியும், ஒப்பற்ற விசேடமான நீண்ட வில்லை முறித்தவனான திருமாலின் (ரீராமரின்) மருகனே! சிருட்டித்து இப் பூமியைத் தந்த பிரமனை அதிர்ச்சியுறச் செய்து (கலங்கவைத்து), அவனுடைய ஒரு சிரத்தைத் தமது கையில் உலவவைத்து (சிரத்தைக் கையர்ற் கிள்ளி அறுத்து), நெருப்புக்கண்ணை விழித்து மன்மதனை எரித்த தந்தையாம் சிவனுக்குக் குருநாதனே! வரிசையுள்ள ஆயிரம், விடம்கொண்ட படங்களைக் கொண்ட ஆதிசேடன் நடுக்கமுறவும், கிரவுஞ்சமலை பிளவு பட்டுத் துாள்படவும், வஞ்சக அரக்கர்களின் பெரிய தலைகள் பதைக்கவும் பொருத மயில் வீரனே! அறங்களை வளர்த்து வாழ்ந்த உமை (தேவி) மகிழ்ச்சியுற, ஆறுதிருமுகங்கள் விளங்க அழகிய குறத்தி (வள்ளி) யுடனும் யானை (தேவசேனை) யுடனும் அருக்கொணாமலை என்னும் தலத்தில் களிப்புடன் உலவும் (விளங்கும்) பெருமாளே! (அல்லது தருகுலாவிய அருக்கொணாமலை எனக்கொண்டு மரங்கள் அடர்ந்த அருக்கொணாமலைப் பெருமாளே . எனலுமாம்). (உயிர் உழல்வேனோ!) (முன் பக்கத் தொடர்ச்சி) 1 சேடன் முடி திண்டாட ஆடல்புரி வெஞ்சூரர் திடுக்கிட நடிக்கு மயிலாம் பாரப்பணாமுடி அனந்தன் முத லரவெலாம் பதைபதைத்தே நடுங்க' - மயில் விருத்தம். # அறத்தில் வாழ் உமை - காஞ்சியில் 32அறங்களை வளர்த்த தேவி (திருப்புகழ் 460) S சிறத்தல் மகிழ்தல் " நாகர் கம்மியன். உளம் சிறந்து புகலுவான்" கந்த புராணம் 4.1-31. தருக்கு களிப்பு. கீதம் வந்த வாய்மையாற் கிளர் தருக்கினார் சம்பந்தர். 3-52-7.