உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1070

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . கோணமலை திருப்புகழ் உரை 597 திருக்கோணமலை தக்க விலை பெறும் பொருட்டு (காசு பறிக்கும் பொருட்டு) மேனியில் (உடலில்) அழகிய வடங்களை (பொன்மாலைகளை) அணிந்து, மேகலை (!இடையணியைப்) பூண்ட ஆடையுடனும், ரத்னாபரணங்களுடனும் மினுக்கும் மாதர்கள் தரும் காம மயக்கில் முழுகி, மோகத்தில் அழுந்தியூறி. பெரிய காமலோலன் இவன் என்று உலகில் உள்ளோர் என் எதிரே சிரிக்க உடலெடுத்துத் துன்பமும் வெறுப்பும் கொண்டு உழைத்துக் களைப்புக்கொள்ளும் கொடியவனாகிய நான் in a கலக்க நெஞ்சினனாய், மும்மலக் கூடாகிய இந்த உடலில், நிரம்ப நோய்களுக்கு ஆளாகித் தவிக்காமல், உன்னைப் பாட்டில் அமைத்துப் பாடிக் கடைத்தேற (ஈடேற) அருளும் ஒப்பற்ற செல்வமே! நற்கதியைத் தரும் நாதன் நீ உன்னைத் தேடி உனது புகழை உரைக்கும் நாயேன் (சிறியன்) (உனது) அருட் பார்வை. யால் உன் திருவடியைக் கூடவே சிறப்பான வழியை (அல்லது, தாய் அன்பை) எனக்கு அருள்புரிய வேண்டும். மலைக்குத் தலைவனே குறிஞ்சி வேந்தனே. கிரிராசனே) சிவகாமியம்மையின் தலைவராம் சிவபிரானது அழகிய குமாரனே திருமுகங்கள் ஆறு கொண்ட குருமூர்த்தி, யே! வடிவழகுள்ள மாது ஒப்பற்ற குறப்பாவையாள் - வள்ளி மகிழும் வேளே! வசிட்டர், காசிபர், தவஞ்சிறந்த யோகியர்கள், அகத்திய முனிவர், இடைக்காடர், நக்கீரர் - இவர்கள் அமைத்த பாடல் களில் அவைதம் பொருளுருவமாய் வரும் முருகனே!