உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 97 (உனது) இரண்டு செம்பொற் பாதங்களில் இன்புறச்செய்து (பிறருக்கு இதுவரையும் கிட்டாததாய்) எனக்கென்றே சிறப்பான வழியில் அப் (பெரும்) பொருள் நிரம்பித் தங்கும்படி தொடுக்கப்படும் தமிழ்ச் சொற்களைத் தந்து 'இப்பொழுதே (ஓர் ஒப்பற்ற வகையிலே) ஆண்டருளு Glu IT LLJI I T.; கற்பகமாகிய மரங்கள் உள்ள பொன்னுலகத்தைக் கவர்ந்து அந்தத் தேவர்கள் அஞ்சும்படி பெருந்துன்பங்களை (அவர்களுக்கு)த் தந்து தன்னை எதிர்த்துவந்த் சூரன் - போரில் தாழ்ந்து குறைவுபட்டுப் பூமியில் மடியும்படி ஒளியும் து.ாய்மையும் கொண்ட வேல்கொண்டு (மடிவித்து) அந்த மேலுலகத்துத் தேவர் தலைவனாம் இந்திரன்மாட்டு அன்புற்று அருள்வோனே! அழகிய தாமரையில் வீற்றிருக்கும் பிரமனைக் கண்டித்து, அழுந்தும் படி அவன் தலையில் குட்டிவிட்டு, நல்ல சிவனுக்கு அன்று (மூலப்) பொருளை (மழலை மொழியிற்) கொஞ்சி (அன்புடன்) சொன்னவனே! வெற்றித் துய்மை, கொடைத் துய்மை, செல்வம் (இவை யெலாம்) நிலைபெற்று விளங்கும் அழகிய திருச்செந் துார்ப் பதியிற் கந்தப் பெருமாளே! (தமிழ் தந்து இப்படி யாள்வாய்) 1. இப்படி அப்படி என்னும் சொற்கள், இக்கணமே அக்கணமே இந்த ஒப்பற்ற வகையில் அந்த ஒப்பற்ற வகையில் என்னும் பொருள்களில் வருகின்றன: ஒப்புடை ஒருவனை உருவழிய, அப்படி அழலெழ விழித்தவனே! தேவாரம் சம்பந்தர் III-4-7 இனிது கவி அப்படிப்ரசாதித்த பாவலனும்' வேடிச்சி காவலன் வகுப்பு. மங்கா நற்பொருள் இந்தா அற்புதம் என்றே இப்படி அருள்வாயே திருப்புகழ், 861. ஒரு பொருள் அப்பர்க்கப்படி ஒப்பித் தர்ச்சனை கொண்டநாதா - திருப்புகழ், 866.