உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 99 34 (நான்) மிகவும் சஞ்சலம் உற்று, 'ஒழுக்கக் கேடு உற்று.நற்புத்தி அற்றுப், பின்னர்ப் பிழைப்பு அற்று, குறை உற்றுப் (போம்படி) பொது மகளிர் (என்னை) - அன்புகொண்டு தங்களிடம் அழைத்துத் தங்களுடைய காமக் H கலைக்குள் சிக்கும்படி அன்புகாட்டிப் பிணித்துத் தங்க. ளுடைய கொங்கைகளைத் தந்து அணையாவண்ணம் - (என்னைக்) காத்தற் பொருட்டு உனது திருவடியைத் தந்து நான்தொண்டு செய்து உன்னைப் பற்றும்படியான ஞானக்கண் (அறிவு நிலை) எனக்குச் செழித்தோங்கச் செந்தமிழ் பாடும் - புலவன் என்னும் பட்டத்தை (உலகோர்) கொடுப்பதற்கும் கருத்திலே ஞானக்கண் பெறக் கிட்டும்படியான புகழைப் பெறுதற்கும் (நீ) கிருபைச் சித்தம் புரிவாயே (அருள் மனம் கொண்டு உதவுவாயாக); - உள்ளம் பூரித்துக் கண் களிக்கும்படியாகத் தண்டனிட்டு வணங்கிக் குளிர்ந்த (தினைப்) புனத்தில் செவ்விய குறத்தியின்மாட்டு அன்பு பெருக உள்ளம் தளர்ந்தவனே! (தேவர்கள்)சோர்வடையும்படி, அங்குத் தனது வலிமையால் களிப்புற்றெழுந்து (அத் தேவர்களைப்) பிடித்து அலைத் துத் தனது திறமையால் அவர்களை அழித்து வருத்திய சூரனுடைய - -- சிரத்தைப் போய் அறுத்துப் பந்தடிப்பது போல அடித்து, அந்த வலிய மலையைக் (கிரெளஞ்சத்தைக்) கண்டு அதைப் பொடியாக்கித் திருச்செந்துாரிற் புகுந்து அங்கு உறைபவனே! 1. சுந்துவப் вр ц АлА Олмѣ)