உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 101 மேம்பாடு உற, ஐந்தெழுத்தின் பொருளைத் திருச்சிற்றம்பலத்தே (திருக்கூத்தாடும்) தந்தையின் செவியில் முறைப்படி ஒதிய பெருமாளே! (க்ருபைச் சித்தம் புரிவாயே) 35 காலனுடைய மிகக் கொடிய தூதர்கள் பாசக் கயிறு கொண்டு என் காலைக் கட்டித் (தம்முடன்) கொண்டு போகஅன்புமிக்க பிள்ளைகளும் தாய்மார்களும் சுடுகாட்டுக்குப் பின் தொடர்ந்து அலறி அழுது வருவதற்கு முன்பாகச், சூலம், வாள், தண்டாயுதம், செவ்விய சேவல், கோதண்டம் (வில்), இவைகளை ஏந்தியுள்ள திருக்கைகளும் அகன்ற அழகிய மார்பும் - துாய்மையுள்ள. தாளில் அணிந்துள்ள தண்டையும் (நான்) 鷺 (வெளித் தோன்ற), அன்பு கொண்டுள்ள மயில்மீது ஏறி என் முன்னே (நீ) வந்தருள வேண்டும்; ஆலகால விடத்தைப் பரமன் ஏற்றுக்கொள்ள, அஞ்சி நின்ற தேவர்கள் வாழும்படி அன்று மகிழ்ச்சியுடன் அமுதத்தை (அவர்களுக்குத்) தந்து, பேரொலி செய்யும் கடல்மீது துயில் கொள்ளும் ஆதிமாய னாம் (திருமாலின்) நல்ல மருகனே! செந்நெல் (வயலிற்) சேர்ந்த சங்கின் கூட்டங்களும், குளங்களில் மலர்ந்துள்ள தாமரைகளும் பக்கங்களிற் சார்ந்து நிறைந்துள்ள திருச்செந்திற் பதியில் வாழ்பவனே! தாவி (எதிர்த்து வந்த) சூரன் அஞ்சி முன் சாய்ந்து அழிய, வேகமும் கூர்மையும் கொண்டுள்ள வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே! (தோகைமேல் கொண்டு முன் வரவேணும்.)