பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 111 சண்பகப்பூ செங்கழுநீர்ப்பூ, ಶ್ದಿ இவைகளால் 慕 மாலை பூண்டதாய், கச்சு (ரவிக்கை), ஆடை இவைகளின் மேற்கொண்ட முத்துமாலை, வயிரமாலையை உடைய. தாய், கடினமும், வி வும், பருமையும் உடையதாய், மந்தரமலை போன்றதாய் உள்ள கொங்கைகளை உடையவராய், அதிக ஆசைகொண்டு பொருள் தேடும் மிகக் கொ டியவர்களாய், வஞ்சக ஆலோசனைகளைக் கொண்ட நெஞ்ச முள்ளவர்களாய், நாகணவாய்ப் புள்ளைப் போன்றவர்களாயுள்ள (பொது மகளிருடைய) வருத்தத்தை உண்டுபண்ணும் மாயக் காமப் பார்வையாம் அம்பினால் உள்ளம் வாடுகின்ற அறிவிலியாம் என்னிடம் வந் து என்னை அடிமைகொண்டு ஆள (நீ) இனி எப்போது நினைப்பாய்? இந்திரன் ஊராகிய (பொன்னுலகைக்) காத்த முதன்மை யாளனே! மிகச் சிறந்த *့မ္ဟု குதிரையை வாகனமாகக் கொண்டவனே! என்றும் நீங்காத இளமை வாய்ந்தவனே!. குறமாதோடு இன்ப அனுபோக காம லீலைகளை உடையவனே! (எதிர்த்து) வந்த அசுரர் தலைவர்களோடு போர் புரிந்தவனே! எங்கள் உமாதேவியின் குழந்தை எனப் ப்டும் அருமை வாய்ந்தவனே! மிக்க பா இன்ங்களில் - செந்தமிழைக்கொண்டு புனைந்த (சம்பந்தராம்) நாற்கவி. யாள்னே! (கிரெளஞ்ச) மலையைப் பிளந்தெறிந்த வேல் வலிமை கொண்டவனே! செஞ்சொல்லைக் கொண்ட அடியார்களுக்கு எளிமையாய் இருப்பவனே! அழகு கொண்ட - நிலவை மேற் கொண்ட நாதருடைய சமயத்தவனே! (அந்தச் சிவபிராற்கு) மந்திர உபதேசம் செய்த பெருமை வாய்ந்தவனே! திருச்செந்துார் நகரில் வாழ்கின்ற அருமைத் தேவர் பெருமாளே! (அடிமையை யாள இனி எப்போது நினைவாயே)