உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 135 52 இரண்டு குழைகளையும் (காதுகளையும்) வந்து தாக்கும் கெண்டைமீன் போன்ற (கண்கள்) ஒப்பற்ற குமிழம் பூப் போன்ற மூக்கை நெருங்கி வந்திடவும், இரண்டு வில் போன்ற புருவங்களும் நெரிந்து மேலெழுந்திடவும் படுக்கையின்மீது - இருண்ட குழற் கற்றை (கூந்தற்கட்டு), வஞ்சிக் கொடி போன்ற இடையிலுள்ள பெரிய ஆடையுடனே குலைந்து போம்படி இதழ் அமுதத்தை உண்ணும் நஞ்சில் (விஷத்தில்) (என்) மனம் (அழுந்தி) அழிய நறுமணத்துடன் கலந்த சந்தனச் சேற்றுடன் பட்ட குங்குமம் மணக்கும் முலையுச்சி பூரித்து எழுந்தோறும் அழகு நிரம்ப - முழுநிலாப் போன்ற திலகம் (கொண்டுள்ள) மாதர்களுடன் கலந்திடும் (இந்த) மூதேவிக்கும் நன்மை பிறக்க அருள் புரிவாயே! எரிவிட்டு நிமிர்ந்த சடையில் நிலாவுடன் (பொங்கி) எழுந்த கங்கையையும், கொன்றையையும் அணிந்த சங்கரர் மகிழ்ச்சி மிகக் கொள்ளும் - இமயமலை பெற்ற கரிய குயில், பச்சை நிறங்கொண்ட கிளி, எனது உயிர் என யான் போற்றும் முக்கண்ணி (பெற்ற) பெருவாழ்வே! அரையிற்கட்டிய சதங்கை, ஒலிக்கின்ற கிண்கிணி, சிலம்பு, நெருங்கியுள்ள தண்டைகள், அழகிய மணியாலாகிய (காற்) சதங்கை, இவையெலாம் கொஞ்ச மயில் மேலே உள்ளம் மகிழ்ச்சி பூண்டு எப்போதும் வருகின்ற குமரனே! (திருக்கோயிலின்) முற்புறத்திலே அலைகள் வந்து பொருகின்ற திருச்செந்துாரிலே தங்கியுள்ள பெருமாளே! (நலம் பிறந்திட அருள்வாயே)