உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 முருகவேள் திருமுறை 12 திருமுறை 52. நலம் பிறக்க இருகுழை யெறிந்த கெண்டைகள் ஒருகுமிழடர்ந்து வந்திட இணைசிலைநெ ரிந்தெழுந்திட அனைமீதே. இருளளக பந்தி வஞ்சியி லிருகலையுடன்கு லைந்திட இதழமுத ருந்து சிங்கியின் LD&OTLOITíL/; முருகொடுக லந்த சந்தன அளறுபடு குங்கு மங்கமழ் முலைமுகடு கொண்டெ முந்தொறு முருகார. முழுமதியு ரிந்த சிந்துர அரிவையரு டன்க லந்திடு 'முகடியு நலம்பி றந்திட அருள்வாயே; حقي ** ‘எரிவிட நிமிர்ந்த குஞ்சியினிலவொடு மெழுந்த கங்கையு மிதழியொட ணிந்த சங்கரர் களிகூரும். இமவரைத ருங்க ருங்குயில் மரகததி றந்த ருங்கிளி யெனதுயிரெ னுந்த்ரி யம்பகி பெருவாழ்வே, அரைவட மலம்பு கிண்கிணி பரிபுர நெருங்கு தண்டைக எணிமணிச தங்கை கொஞ்சிட மயில்மேலே. அகமகிழ்வு கொண்டு சந்ததம் வருகுமர முன்றி லின்புறம் அலைபொருத செந்தில் தங்கிய பெருமாளே (37) 1. முகடியும் முகடிக்கும். முகடி - மூதேவி. 2. எளிதரு சடை சம்பந்தர் தேவாரம், 1-122.1.