பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்| திருப்புகழ் உரை 133 இனிமையான பழங்களைக் குரங்குகள் சிந் துகின்ற * மலைகளுக்கு உரிமை கொண்டவனே! திருச்செந்துாரில் வந்து அமர்ந்துள்ள இறைவனே! குகனே! கந்தனே! என்றும் இளையவனே! ஏழு கடலும், அஷ்டகிரியும் (எண் மலைகளும்) அசுரர். களும் அஞ்சும்படி, அஞ்சிநின்ற (பயங்கொண்டிருந்த) தேவர்கள்ை அஞ்சாதீர்கள் என்று (அபயம் அளித்த) பெருமாளே! (உன் மலரடி வணங்க என்று பெறுவேனோ!) 51. இயற்றமிழுடன் கூடிய இசைஞானத்தில் (அல்லது நடையிலும் சொல்லிலும்) தகுதிகொண்ட மாதர்கள் காரணமாய்த் தளர்வு அடைந்துஇரவும் பகலும் மனது (அவர்களையே) சிந்தனை செய்து (நான்) அலையாமல் (உனது) உயர்ந்த கருணையால் வரும் இன்பக் கடலில் மூழ்கி உன்னை எனது உள்ளத்திலே அறியும் அன்பைத் தந்தருளுவாயாக; மயி லும் ஆடும் (நிறைந்த) மலையிடையே (வசிக்கும்O வேடர்களுடைய அந்தத் தினை (ப்புனக்) காவலைப் பூண்டிருந்த வனசமகள் (இலக்குமி) போன்ற குறத்தியை (வள்ளியை) வணங்கி அணைந்தவனே! (திருக்)கயிலை மலைபோலப் (புனிதமான) திருச்செந்துார்ப் பதியில் வாழ்பவனே! யானை முகவனுக்கு (கணபதிக்கு) இளைய கந்தப் பெருமாளே! (உனை எனதுள் அறியும் அன்பைத் தருவயே.)