உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 முருகவேள் திருமுறை (2 - திருமுறை நன்றுபொருள் தீர வென்றுவிலை பேசி நம்பவிடு மாத ருடனாடி 'நஞ்சுபுசி தேரை யங்கமது வாக நைந்துவிடு வேனை யருள்பாராய், குன்றிமணி போல்வ செங்கண்வரி 'போகி கொண்டபடம் வீசு மணிகூர்வாய். கொண்ட மயிலேறி அன்றசுரர் சேனை கொன்றகும ரேச குருநாதா மன்றல்கமழ் பூக தெங்கு திரள்சோலை வண்டுபடு வாவி புடைசூழ. மந்தி நடமாடு செந்தினகர் மேவு °மைந்தஅம ரேசர் பெருமாளே (47) 63. திருவடி பெற குகர மேவுமெய்த் துறவினின் மறவாக் கும்பிட் டுந்தித் தடமூழ்கிக் குமுத வாயின்முற் றமுதினை நுகராக் கொண்டற் கொண்டைக் குழலாரோ, டகரு துாளிகர்ப் புரதன இருகோட் டன்புற் றின்பக் கடலுrடே அமிழு வேனைமெத் தெனவொரு கரைசேர்த் தம்பொற் றண்டைக் கழல்தாராய், 1. நஞ்சு . நஞ்சையுடைய பாம்பு. இஃது ஆகுபெயர். 2. போகி - பாம்பு. 3. மைந்தன் - வீரன்.