பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 முருகவேள் திருமுறை 12-திருமுறை நிலத்திற் றன் பெரும் பசிக்குத் தஞ்சமென் றரற்றித் துன்பநெஞ் சினில் நாளும், புதுச் சொற் சங்கமொன் றிசைத்துச் சங்கடம் புகட்டிக் கொண்டுடம் பழிமாயும் புலத்திற். சஞ்சலங். குலைத்திட் டுன்பதம் புனர்க்கைக் கன்புதந் தந்தருள்வாயே; மதித்துத் திண்புரஞ் சிரித்துக் கொன்றிடும் மறத்திற் றந்தைமன் றினிலாடி மழுக்கைக் கொண்டசங் கரர்க்குச் சென்றுவண் 1 டமிழ்ச்சொற் சந்தமொன் றருள்வோனே; குதித்துக் குன்றிடந் தலைத்துச் செம்பொனுங் கொழித்துக் கொண்ட செந் திலின்வாழ்வே. குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங் குவித்துக் கும்பிடும் பெருமாளே (62) 78. திருவடி பெற நிலையாப் பொருளை சீயுடலாக் கருதி நெடுநாட் பொழுது மவமேபோய். நிறைபோய்ச் செவிடு குருடாய்ப் பிணிகள் நிறைவாய்ப் பொறிகள் தடுமாறி, 1. தமிழ்ச்சொற் சந்தம் - இது தேவாரத்தைக் குறிக்கலாம் சந்தம் - வேதம் 19 ஆம் பாடலைப் பார்க்க 2. உடல் - பொன்.