பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 181 (நீங்களே) இப்பூமியில் (என்) பெரும் பசிக்குப் புகல் அளிப்பவர் என்று முறையிட்டுத் துன்ப்மே குடிகொண்ட) நெஞ்சில் நாள்தோறும்; புதிதாகச் சொற் கூட்டத்தால் (பாடல்) ஒன்றை அமைத்துச் சொல்லும் சங்கடத்தில் நானே ம்ாட்டிக் கொண்டு, உடம்பை அழித்து மாய்கின்றபுலன்களால் (வ்ரும்) சஞ்சலங்களை ஒழித்துத் தொலைத்து உன் திருவடியைச் சேர்வதற்கு வேண்டிய அன்பைத் தந்து அருள்புரிவாயாக; மனத்திற் கருதி வலிய புரங்களைச் சிரித்து அழித்த வீரமுள்ள தந்தையும், அம்பலத்தில் ஆடியும், மழுவாயுதத்தைக் கையிற் கொண்டவருமான சங்கரற்கு (சிவபிரானுக்கு) (தலந்தோறுஞ்) சென்று, வளப்பம் பொருந்திய் தமிழ்ச் சொற் சந்தம் ஒன்றை (சந்தம் நிறைந்த தேவாரப் பாட்லைச்) சமர்ப்பித்தவனே! (அல்லது சிவபிரானிடத்திற் போய் வளவிய் தமிழ்ச் சொல்லால் வேதப் பொருள்ை அருளியவனே! (அலைகள்) குதித்தெழுந்து (எதிரில் உள்ள) குன்றுகளைத் தோண்டி அலைத்துச் செம்பொன்னையும் கொழித்துத் தள்ளும் திருச்செந்துாரில் வாழ்பவனே! குறக்குல்த்து அழகிய (கொம்பு போன்ற) வள்ளியை முன்பு (தினைப்) புனத்தில் உன் செங்கரங்களைக் கூப்பிக் கும்பிட்ட ப்ெருமாளே. (உன்பதம் புணர்க்கைக் கன்பு தந்தருள்வாயே.) 78 நிலையிலாத பொருளைப் பொன்னாக நினைத்து (அதன் பொருட்டு) நெடுநாட் பொழுதெல்லாம் வீணாகச் செலவழித்து(மனத்தின்) திண்மை போய்ச், செவிடாகி, குருடாகி, ணிகள் நிறைந்து ஐம்பொறிகளும் தடும்ாற்றம் அடைந்து,