உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலமும் நீரும் படுக்கை மேலேயே பெருகி இறந்து படுவேனுக்கு உரிய விதியாக (முத்தி நெறியாக) - மறைகள் போற்றுதற்கு அரிதான ஒளியாக விரிந்துள்ள மலரடித் தாமரையைத் தந்தருளுவாயாக; கொலையே செய்து வருகின்ற அசுரர்கள் கெடவும், பெரிய கடல் குளம்போல வற்றவும், முதிர்ந்த மாமரம் - குறியின்படியே பட்டுப், பிளவுபட, மேலே பற்றும்படியாக எரிவீசும் வேலாயுதத்தைச் செலுத்தினவனே! அலைவாய் (திருச்செந்துார்க்) கடற்கரையில் மகிழ்கின்ற சீர்க் குமரனே! அழியாத பரிசுத்த வடிவாகும் - சிவபிராற்கு எல்லாம் கடந்த பொருளை விளக்கிக் காட்டிய் தலைவனே! அடியார்க்கு எளிய பெருமாளே! (மலர்தாட் கமலம் அருள்வாயே) 79 (கொலை, களவு, பொய், கள்ளருந்தல், குருநிந்தை எனப்படும்) ஐம்பெரும் பாதகமும் குடிகொண்ட (மாதிரி பயங்கரமாயுள்ள ) பிறைச்சந்திரன் போல (வெளுப்பும் வளைவும் உள்ள) பற்கள், நெருப்புப் போன்ற தலைமயிர், கொடிய விஷம் ததும்புகின்ற கண்கள், குரங்கு போன்ற பயங்கரமான ஒளி வீசும் முகம், (அல்லது) பிலம் - குகை போன்ற, அகம் (இருள்) (மனம், ஒளி வீசும் முகம்), விரைந்து செல்ல வல்லது, நீண்டுள்ளதுமான முத்தலைச் சூலம் - கட்டுதற்கு வைத்துள்ள (பாசக்) கயிற்றைக் கொண்டுள்ள கை, மிகுத்து நீண்ட கரிய மேகம் போன்ற உருவம் (இவ்விதமான கோலத்துடனே) அழகு இல்லாத ஒர் எருமையின் (அல்லது குண்மில்லாமல் ஒர் எரும்ையின்) முதுகினி மேல் யமராஜன்.