உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 219 93 மூண்டு வருகின்ற வினைகள் சேர்ந்து மேல்கொண்டு (என்னைப் பீடிக்க) (நிலம், நீர், தி, காற்று, விசும்பு எனப்படும்) ஐந்து பூதங்களாற் பலவகையான மாயங்கள் (என்) உள்ளத்திற் குவிய, நெறியான செயல், நீதியான செயல் என்பன (நான்) செய்யாமல், வஞ்சிக்கொடி போன்ற (மாதர்களின்) அதிபாரமான (கொங்கைகளின் மீது) - மோகங் கொண்ட நினைவு உள்ளவனாய் (அவர்களுடன்) போகத்தை அனுபவிப்பேன்; (அத்தகைய நான்) தேவர்கள் தேடுதற்கு அரிதானதும், ானத்தினால் அறியப்படும் பொருளாய் ன்றுள்ளதும், (பிராணவாயு) மூலாதாரத்தினின் று மேலே உள்ள ஆதாரங்களிற் செலுத்தப்படும் யோக நெறியை மேற்கொண்டு, அந்நிலையிலேயே இருந்து: நாள்தோறும் மிக்க வேகமாகச் செல்லும் (அப் பிராண) வாயுவின் சேர்க்கையால் எழுகின்ற சிவாக்கினிச் சுவாலை வீச, அந்தப் ராண வாயுவுடனும் சிவாக்கினியுடனும் (ஆறு ஆதாரங்களின் வழியே) (கபாலம் வரையில்) போய்ச் சேர்ந்து (தியானத்தில் ஒன்றி) வானிடத்தே மேலைச் சிவ வீதியிலே) நிறைந்த சந்திரமண்டலத்தின் மீதிருந்து ஊறு கின்ற கலை இன்ப அமுத ஊறலை - நாடி யாய்ந்து, அந்நிலைக்கும் மேலே போய் நிற்கின்ற கரிய னந்த மயமான பர ஆகாச வெளியில் ஏறிச் சேர்ந்து, நான் என்னும் வேற்றுமை யில்லாததும் நாடிப் பார்க்கின் இன்னும் வேறு எதுவும் இல்லாததுமான (சூனிய) நிலையில் (எல்லா மிழ்ந்த நிலையில்) வாழும் படியான (பாக்கிய) நிலையைப் பெறுகின்ற ஒருநாளும் உண்டோ! H. விடத்தை உண்டவள், மாதங்கி, வேதத்திற் சொல்லப்பட்ட பேதை, பெருமை வாய்ந்த நீலி (நீலநிறம் உடையவள்), கிரகபாதங்களின்படி (கோள் முறைப்படி) ஆயுள் நாள் முடிந்தமையால்) வந்த காலன் விழும்படி உதைத்து மோதிய துர்க்கை, நிலம், (அம்பு) நீர், அவையுடன் நெருப்பு, காற்று, -