பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/253

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகி திருப்புகழ் உரை 237 திரு விளக்குகள் காட்டும் மங்களகரமான ஜோதியே! உன்னை క్స్లే வணங்குகின்றேன்; ப்ரிசுத்தமான பரவெளியில் விளையாடுபவன்ே! உன்ன்ன வணங்குகின்றேன், வணங்குகின்றேன், தேவயானை. யைப் பக்கத்திற் கொண்டவனே! உன்னை வணங்குகின் றேன், வணங்குகின்றேன்; (உன து) திருவருளைத் தந்தருளுக. (இரப்போர்க்கு ஈதல் (கொடுத்தல்), பலவித பூசைகள், (நூல்களை)ஒதல்,(நல்ல) குணம், ஆசாரம், நீதி, கருணை, ಘೀ அழகிய பாதசேவை శి ஆகிய இவைகளை மறவாத (சோழ மண்டலத்தில்) உள்ளதும், ஏழு பூமியில் உள்ளோரும் புகழ்கின்ற காவேரி நதியால் செழிப்புற்று வளம் பெருகும் சோழமண்ட்லத்தில் உள்ளதுமான மனதுக்கு இன்பகரமான ராச கெம்பீரம் என்னும் நாட்டுப் பகுதியை ஆண்டருளும் நாயகனே! வயலூர் (அண்ணலே)! (தம்மாட்டு). அன்புவைத்த திருவாரூரர் என்னும் (சுந்தரமூர்த்திப் பெருமானது) நட்ப்ைக் கூடினவராய், அவருடன் முண்பொருநாள், ஆடலில் வல்ல, விரும்பத்தக்க குதிரை மீதேறி மகா கயில்ைக்குப் போய் (அங்கே) - ஆதி உலா என்னும் அழகிய (கயிலாய ஞான) உலாவை ஆசுகவியாகப் பாடின சேரர் பெருமான்ாம் சேரமான் பெருமாளுக்கு உரித்தான கொங்கு மண்டலத்து வைகாவூர் என்னும் நாட்டுப் பகுதியில் இருக்கும் (திரு) ஆவினன்குடி என்னும் தலத்தில் வாழ்வு கொண்டிருக்கும் தேவர்கள் பெருமாளே! (அருள்தாராப்.)

  • கி.பி. 825 ல் என்ப.