பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/305

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி) திருப்புகழ் உரை 289 வீரை என்னும் தலத்தில் வீற்றிருக்கும் குமரனே! தீரம் தைரியம்) கொண்டவனே பழநி வேல்னே தேவர்கள் பெருமாளே! (அடியரொடு கூடும் வகையை யருள்புரிவாயே) 122 ΦΗ;ώl)/ΤΙ / மயிலே! தாமரையில் வீற்றிருக்கும் மானே (இலக்குமியே): உல்லாசம் மிகுந்த க்ாம் துரையாம் மன்மத வேளுக்கு உகந் நாகணவாய்ப் புள்ளைப் போன்ற பாவையே! థేపీ நிரம்பிய அதுபோக சுக (காம) லீலை, விநோதங்கள் முழுமையும் அறிந்துள்ள தேன் என இனிப்பவளே! சூதாடு கருவி போன்ற குளிர்ந்த இளநீர் போன்ற பார முலைகளின்மீது (நான்) அணையும்படி வாரும்: வாயிதழை உண்ணத் தாரும், இது என் ஆணை மொழியர்கும்; சோர்வே இல்லாமல் நான் உமக்கு அடிமையாவேன்; உம்மீது ஆணை: (உம்மீது) மிகவும் காம மயக்கம் கொண்டுள்ளேன்; (எனது) தேகத்தில அழுந்திப் படியும்படியாக (உமது நகத்தால் என்றும் அ # த அடையாளத்தை இடவாரும் என்றெல்லாம் மாதர்களுடன் ஆசை மொழிகளைக் கூறித் திரிகின்ற மகா பர்தகன், நீதியில்லாதவன் ஆகிய (நான்) உன்னை ஒதுவதில்லை; உனக்கு ஆன, அன்பு பூண்டவராம் அடியாரோடு கூடுவதில்லை; திருநீற்றை நெற்றிமீது இடுதல் இல்லாத் முடன் எவ்வித நற்குணமும் இல்லாதவன் நான் ஆயினும் அடியேன் ஈடேறுமாறு உனது திருவடியைத் தந்தருளுவாயாக: அண்ட முகடுமுதல் அகில பாதாளம் வரையும் மேருமலை அங்ங்னே சுழலக் கடலே தாழியாக (கடையும் பானையாக)த் தேவர்கள் வாலி முதலானவருடனும், மற்றவர்களுடனும் அமுது கடைந்த நாளில் -