பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/325

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி) திருப்புகழ் உரை 309 குலவுதல் செய்து, கிகிகி கிகிகி எனக் கண்டத்து ஒலிகள் (புட்குரல்கள்) குமுறி எழ, வளையல்களின் ஒலி மேலெழ இளநீர் போன்ற முலைகள் அசைய, இரண்டு தொடைகளும் இடையும் அசைய, மயில்போல நடித்து, இனிய அமுத ரசம் (இதழ்களினின்றும்) வடிய மேலே கலவிகளைப் புரிபவராம் (வேசையர்களால் வரும்) இடரிலும் மயக்கிலும் பட்டு அழிவேனோ! விளங்கும் சுவை நிரம்பிய பாடல்கள் பொலிவுறும் அருணகிரி சொன்ன வெற்றிமலையன்ன புகழ் (மாலையை) அணிவோனே! விமலி, அமலி, நிமலி, குமரி, கவுரி, இளமை உடையாள், சுடுகாட்டில் ஆடுபவள் அருளிய குமரனே! பழைமையான வேத முடிவில் அகர, மகர உகர (ஒம் என்னும் பிரணவ) ரூபவடிவை உடையவனே! கழனி வயல்களும், கமுகும், வாழையும், பலாவும் விளங்கும் பழநியில் வீற்றிருக்கும் பெருமாளே! (வேசையரால் வரும் இடரில் மயலில் உளர்வேனோ) 132 மயிர்ச் சாந்தும், மணமுள்ள மலர்களும் நிறைந்த கூந்தலையுடைய (பொது) மகளிரின் குழப்பந்தரும், செருக்கு உற்ற கண் வலையிற்பட விதி தலையில் எழுதப்பட்டு, இல்வாழ்க்கையில் இருக்க வேண்டி அமைந்தபடியால், மக்கள், தாய், சுற்றத்தார், மனைவியர் நண்பர், பசு முதலாய பலவகைய சிந்தனை வர, ஆசைக் கடலில் முழுகி இடர் உறுகின்ற துயரம் நீங்க -