பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகி திருப்புகழ் உரை 321 குறியாக, வட்டமாக, நெருக்கமாக இட்ட குங்குமப் பொட்டுள்ள முகத்தில் முத்துக்கள் போல (வேர்வைத்துளிகள்) பொலிந்து விளங்கத் தீய (காம) மயக்கை உண்டு பண்ணும் பெருங் குளத்தில் (அல்லது பெரிய வழியில்) (இடத்தில்) மழுங்கிப் போகலாமா! விளங்கும் அழகிய (தினைப்) புனத்தில் தனித்திருந்த குறமகள், ரவிக்கை அணிந்த கொங்கைகளை உடைய மின்னொளி போன்றவள் (ஆகிய) வள்ளியின் இனிமையுள்ள தாமரை (யொத்த) பாதங்களிற் பணிந்தருளிய (கந்தவேளே) ஏழு கடலும் வற்ற, பெரிய பொல்லாத கிரவுஞ்ச மலை இடிபட, மிகுந்த வேகத்துடன் வெளிப்பட்டு வந்த பகைவர்களாம் அசுரர்கள் பதைக்க, அழிவு செய்து விளக்கமுற்ற செங்கை வேலனே! பல விதமான சிறந்த கற்புக் குணங்கள் நிறைந்த அழகியும், நெருக்கமுள்ள (இமய மலை யீன்ற செழிப்புள்ள கொடி போன்ற வளுமான (பார்வதி தேவி) பருத்த கொங்கையில் மிக்கு நிறைந்த குணமுள்ள பாலை - பல திசையில் உள்ளவர்களும் மெச்சிப் புகழும்படியாகச் செந்தமிழ்ப் பாமாலைகளைப் பாடுக என் று கூறிக் கொடுக்க அந்தப் பாலை விருப்பமுடனும் மகிழ்ச்சி யுடனும் உட்கொண்டருளிய (தம்பிரானே!) பழநியில் மலைமீது விளங்கி நின்றருளும் தம்பிரானே! (மயல் தடந்தனில் மங்கலாமோ) 137 மேகம் போன்ற கூந்தலில் உள்ள வாசனை வீசும் நல்ல மணமலர்கள் நெருங்கும்படி சேர்ந்து, இடம் பெறும்படி விளங்கும் நக நுனியால் குறிகளை) அழுந்தப் பதித்துத் தான் தொடர்ந்துள்ள மங்கையர்களின் உடலின் மேலே (உடலின் மேலே நகக் குறியைப் பதித்து) -