பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/339

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி) திருப்புகழ் உரை 323 முகத்தில் வெயர்வு உற்றுப் பரவு, செங்கயல் மீன்போன்ற க்ன் இணைக்ள் சிெக்கச் சிவக்க, குங்குமம், கஸ்துாரி அணிந்து செருக்குள்ள ேே மேலெல்லாம் பொருந்திவெளிப்பட்டுத் தோன்றும் உயிரே போலும் (இவர்கள் எனக் கருதி, அவ் வேசையரோடு) புயங்கள் இன்புறும்படியாகச் சம்பந்தம் செய்து, ரண்டுள்ளதும் G)IIT 5FGՆՌGԾT கலந்துள்ளதுமான படுக்கையில் அமர்ந் சுருக்கங் கொள்ளும் கட்டிற் படுக்கையிற் பொருந்தியிருந்து - ஒளி விளங்கும் தாமரை, யன்ன கரங்களின் மேலுள்ள வளைகள் ஒருங்கே கலின்கல் என்று செய்ய, மிக்க மோகம் கொண்டு அவர்களுக்காக ரக்கம் காட்டும் அன்பு ஒழியாதோ! உலகம் முழுதும் ஒரு சேர ஈன்ற சங்கரி, அடியார்களுடைய உள்ள்த்தில் உறைகின்ற சிறப்பு வாய்ந்துள்ள சிவபிர்ர்னது புறத்தே இடங் கொண்டுள்ள மங்கை, நல்ல மங்கை, §% தும் - விளங்கும் அழகிய பச்சைப் பசேல் என்ற நிறம் உடையவள், யாழ் ஏந்திய கரத்தினள், ரவிக்கை பொருந்தி விளங்கும் கெiங்கையை உன்டயவள், திருவருள் என்கிற நல்லு செல்வத்தைப் பரப்பிப் பாலக்கும் பராசக்தி, அண்டங்களுக்கு அப்பால் - பகலும் இரவும் அற்றுப் போன உயர்ந்த இடத்தில் உள்ள) அம்பிகை, #, (மும்மூர்த்திக்ளுக்கும் உயர்ந்தவள்), அங்ங்னம் உயர்ந்தவளாய், மூவரும் வல்லரான (அவர்களுக்கு மேம்பட்ட மூர்த்தியான) சிவபிரான் அன்பு கொள்ளும்படி பெர்ருந்தித் (தவம்) செய்த (அல்ல்து யாவும் செயும்) பரதேவதை, அன்பு மிக்க - பதிவ்ரதை, சிறந்த (சிவபிரானது) சிரசில் விளக்க முற்ற ருளும் கங்கா நதி (உற்பத்தியாகும் மலையில் இம்யமலையில்) உதித்த பெண்ணாகிய பார்வதி தந்தருளிய தம்பிரானே! பழநி மலைமீது விளங்கி நின்றருளும் தம்பிரானே! பகிர்தி - கங்கையும், வெற்பிற் பிறந்த மலைமகள் பார்வதியும், எனவும் பொருள் காணலாம். (மயலுற் றிரங்கும் அன்பதொழிந்திடாதோ)