பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி) திருப்புகழ் உரை 371 ஆசை பூண்ட வாழ்க்கையும். உளக் களிப்பைத் தரும் (அல்லது ணுங்கிப் பசும்) மனைவியும், சுற்றத்தாரும் - (தம்மை) அடுத்து நட்புப் பூண்டவர்களும், இன்பம் தரும் குழந்தையும், வளப்பமுள்ள நாடும், (தாம்) இருப்பிடமாகக் கொண்ட ஊரும் ஆகிய இவை யெல்லாம் மெய்யென்று என் மனம் எண்ணுவது அங்ங்ணம் எண்ணங் கொள்ளாமல், உன்னைப் போற்றி வழிபடும் பணியைத் தந்தருளுக. இடப வாகனத்தில் ஏறும் (சிவபிரானது) செவியிற் புகும்படி உபதேசப் (பொருளை)ச் - சொன்ன (திரு) நாவை உடையவனே காவற் பரண் மீதிருந்த குறமகள் வ்ள்ளியின் இரண்டு பாதங்களையும் தாங்கும் திருமுடியை உடையவனே!. (வேள்வி நாயகனான) இந்திர்ன் த்ர வந்த தேவசேனையின் நாயகனே! கொண்ட பன்னிரு புயனே (பன்னிரண்டு புயங்களைக் கொண்டவனே): பழநியில் வீற்றிருக்கும் பெருமாளே! (வழிபடு தொழிலது தருவாயே) 160 அறவழி யல்லாத தொழில் (நிற்கும் நிலையை)க் கற்று, கொடுழை பூண்ட் வேல் போன்று கண்ணைச் செ லுத்தி, உள்ள்த்தில் அறிவு என்பதை நீக்கி - விலை பேசி (வந்தவரைப்) படுக்கையிற் சேர்த்துத் தமது பவளம் போன்ற சிவந்த வாய் அமுதத்தை அதிகம்ாகத் தந்து உதவி, (கை வன்ளயாலே - வளைக் கையாலே) வளையல் அணிந்த கையாலே உறவு கூறி உடலை இறுகத் தழுவிக் கொண்டு உலையில் இட்டமெழுகுபேர்ல் (உருக்கம் காட்டும்) மாதர்களோடு (கூடி) உருகி வருகின்ற ஒழுக்கம் - காம நாடகம் என்கின்ற பித்த மயக்கம் - (என்ன்ன விட்டுத் தொலையுமாறு) நீ எனக்கு ஒப்பற்ற முத்தி யின்பத்தைத் தந்தருள வேண்டும்.