பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382 முருகவேள் திருமுறை (3- திருமுறை புலவினைய ளைந்து படுமணிக லந்து புதுமலர னிந்த கதிர்வேலா. புழுகெழம ணந்த குறமகள்கு ரும்பை பொரமுகையு டைந்த தொடைமார்பா, பலநிற மிடைந்த விழுசிறைய லர்ந்த பருமயில டைந்த குகவீரா. 'பனைபணிசி றந்த தரளமணி சிந்து பழநிமலை வந்த பெருமாளே. (65) 165. பொதுமகளிர் இணக்கம் அற ஆண்டருள தனத்தான தனதனன தனத்தான தனதனன தனத்தான தனதனன தனதான உயிர்க்கூடு விடுமளவும் உமைக்கூடி மருவுதொழில் ஒருக்காலு நெகிழ்வதிலை யெனவேஆள். உரைத்தேமுன் மருவினரை வெறுத்தேம திரவியம துடைத்தாய்பின் வருகுமவ ரெதிரேபோய்ப், 'பயிற்பேசி யிரவுபகல் அவர்க்கான பேதமையல படப்பேசி யுறுபொருள்கொள் விலைமாதர். "படப்பார வலைபடுதல் தவிர்த் தாள மணிபொருவு பதத்தான மயிலின்மிசை வரவேணும்; 1. பனை - மூங்கில். 2. பயில் பலவும் பேசி - பதினோராந் திருமுறை ஆளுடை திருவுலா II.2. 3. பதமை - பதங்களை வார்த்தைகளை. 4. படம்- பாம்பின் படம், சிலை; பாரம் - கொங்கை - விநாயகர் துதி - 4 - பார்க்க 5. மணி பொருவு பதத்தான மயில் - மயிலின் கால்களில் மணி கட்டி யிருத்தல் "மயில் மணிகள் சத்திக்க நிர்த்தமிட" (147)