உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 முருகவேள் திருமுறை 13. திருமுறை தயிர்ச்சோர னெனுமவுரை வசைக் கோவ வனிதையர்கள் தரத்தாடல் புரியுமரி மருகோனே. தமிழ்க்காழி மருதவன மறைக்காடு திருமருகல் த்துக்கோடி வருகுழகர் தருவாழ்வே, °செயிற்சேல்வினுடுவினாடுபொரப்போய்விமமர்பொருது செயித்தோடி வருபழநி யமர்வோனே. திணைக்காவல் புரியவல குறுப்பாவை முலைதழுவு திருத்தோள அமரர்பன்ரி பெருமாளே. (66) 166. ஆசை அற தனதனன தனதனன தானத் தானத் தனதான ஒருபெழுது மிருசரன நேசத் தேவைத் துணரேனே. உனதுபழநிமலையெனு மூரைச் சேவித் தறியேனே: பெருபுவியி லுயர்வரிய வாழ்வைத் தீரக் குறியேனே. றவியற நினைகுவன்ெனால்ச்ப்பாடைத் தவிரேனோ, 1. கோவ வனிதையர் - கோபிகா ஸ்திரிகள். கண்ணபிரான் மாதர்கள் ஆடையைக் கவர்ந்த திருவிளையாடல் முதலிய: "இடை மகளிர் குவிந்து தடங் குடைவார் பூந்துகில் வார் பூம்புயல்" வேல் வாங்கு வகுப்பு. "இடையர் மாதுடன் கூடி விளையாடு சம்போக திருமார்பகன்" திருப்புகழ் 374). 'வட குல கோபாலர்தமொரு பதினாறாயிரம் வனிதையர் தோள் தோய் தரும். நாராயணன் (திருப்புகழ் 583). 2. திருமருகல் - நன்னிலம் ரெயில் ஸ்டேஷனிலிருந்து 7 மைல் (வழி யில் 4 மைலில் திருப்புகலூர் இருக்கிறது):தேவாரம் பெற்ற ஸ்தலம், விஷந் திண்டி இறந்த செட்டிப் பிள்ளையைச் சம்பந்தர் உயிர்ப்பித்தருளிய ஸ்தலம். ததுக்கோடி - ராமேசுரத்திலிருந்து 12 மைல் - ஸ்நாந கட்டம் இது ததுக்கோடி ரெயில் ஸ்டேஷனிலிருந்து 2மைல். "நீடு ததுக்கோடியினை நினைந்தாலும் புகழ்ந்தாலும் நேர் கண்டாலும் வீடு பெறல் எளிதாகும்" - (சேது புராணம் தநுக்கோடிச் சருக்கம்2) குழகர் - வேதாரணியத்திற்குத் தெற்கே 6 மைலில் உள்ள தலம் கோடி இது குழகர் கோயில் என வழங்கும். 3. செய்யில் சேல் - வயல்களி லிருக்குங் கெண்டை மீன்கள். 4. விமமர் - விம்மு அமர். 13