பழகி திருப்புகழ் உரை 385 தயிரைத் திருடினவன் என்னும் மொழி நிந்தையை (நிந்தை மொழியை)ச் சொன்ன கோபிகாஸ்திரீகளிடம் விளையாடல் புரிந்த கண்ணபிரானின் மருகனே! தமிழ்க்காழி (சம்பந்தரது திருநெறித் தமிழ் எனப்படும் செந்தமிழ்த் தேவாரத்துக்குப் பிறப்பிடமாய சீகாழி) திருவிடைமருதூர், வேதாரணியம், திருமருகல், தநுக்கோடி இத் தலங்களில் எழுந்தருளியிருக்கும் சிவபிரான் தந்த வாழ்வே (குமரனே!). வயல்களிலிருக்கும் சேல்மீன்கள் வானத்தில் உள்ள நகூடித்திரங்களோடு போர் செய்யச் சென்று மிக்கு எழும் போரைப் புரிந்து வெற்றிபெற்றுத் திரும்பி ஓடிவரும் பழநித் தலத்தில் வீற்றிருப்பவனே! தினைப்புனத்தைக் காவல் புரியவல்ல குறப்பாவையாம் வள்ளியின் கொங்கையைத் தழுவும் திருத்தோளனே! தேவர்கள் வணங்கும் பெருமாளே! (ஆள மயிலின் மிசை வரவேணும்) 166 ஒருவேளைகூட உனது இரண்டு திருவடிகளில் அன்பு வைத்து அறிய மாட்டேன் - உனது பழநிமலை என்னும் ஊரை வணங்கி அறியேன்; பெரிய (இப்) பூமியில் உயர்வுள்ளதும் அருமை வாய்ந்ததுமான வாழ்க்கையை முற்றும் குறிக்கொள்கின்றேனில்லை; (இவ்வாறு குறைகள் இருந்தும்) பிறவி ஒழியவேண்டுமென நினைக்கின்றேன் (அந்த நினைப்புள்ள நான்) என் ஆசைப் பாடுகளை (ஆசைகளை) விட்டொ ழிக்க மாட்டேனோ;
பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/401
Appearance