உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*. 386 முருகவேள் திருமுறை 13. திருமுறை துரிதமிடு நிருதர்புர சூறைக் காரப் பெருமாளே. தொழுதுவழி படுமடியர் காவற் காரப் பெருமாளே. விருதுகவி விதரணவி நோதக் காரப் பெருமாளே. விறன் மறவர் சிறுமிதிரு வேளைக்காரப் பெருமாளே. (67) 167. சிவகதி பெற தனதன தனன தான தனதன தனன தான தனதன தனண தான தனதான ஒருவரை யொருவர் தேறி யறிகிலர் மதவி சாரர் ஒருகுண வழியுறாத பொறியாளர். உடலது 'சதமெ னாடி களவுபொய் கொலைக ளாடி உறநம னரகில் வீழ்வ ரதுபோய்பின், வருமொரு வடிவ மேவி யிருவினை கடலு ளாடி மறைவரி னனைய கோல மதுவாக. மருவிய பரம ஞான சிவகதி tபெறுக நீறு வடிவுற அருளி பாத மருள்வாயே, 'சத மெனாடி சதம் என நாடி பெறுக பெற. tசிவகதி, திருநீறு, திருவடி - இம்மூன்றையும் தாம் இங்கு வேண்டியவாறே அருணகிரியார் பெற்றனர் என்பதற்குச் சான்று: 'சிவப்பேறுக்குக் கடையேன் வந்துட்புகச் சீர்வைத்துக் கொள்(ள்)ளும்.பெருமாளே." (திருப்புகழ் 587) "அடியேன் துயர் தீர்ந்திட வெண்தழல் மாபொடி அருள்வோர்"(திருப்புகழ் 568) "எனது தலையிற் பதங்கள் அருள்வோனே" (திருப்புகழ் 289, 513, 515, 814 - பாடல்களையும் பார்க்க.