பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/415

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகி திருப்புகழ் உரை H 399 முருகனே! கடம்பனே! குறமகள் பங்கனே! ஒலமென்று தேவர்கள் ஓலமிட - பழமையான கடல் போலப் பரந்து வந்த வலிமையும் வஞ்சகமும் பகைமையும் பூண்ட அசுரர்களை வென்ற கூரிய வேலனே! நறுமணம் போல இன்பத்தைத் தருவதும், பச்சை நிறங் கொண்டதும், பரிசுத்தமும், வலிமையும், நன்மையும், வெற்றியும் கொண்டதுமான மயில் வீரனே! தலைமயிரைப் பறிக்கின்ற இழிந்தோராம் (சமணரை) கழுமுனை வரிசையில் ஏறச் செய்து பழநியில் வீற்றிருக்கும் பெருமாளே. (துங்க வித பதம் என்று பெறுவேனோ) 173 கரும்பு வில்லில் மணம் வீசும் அம்புகளைத் தொடுத்து மன்மதன் செலுத்தினதுபோலக் கடைக்கண் நோக்குடன் சிரித்து, நெருங்கிக் கருத்துடன் உபாயச் செயல்கள் செய்கின்ற அழகிய மாதர்களின் - கோபமுள்ள யானையும் திடுக்கிடும்படி செருக்குடன் செழித்து மிகவும் எதிர்த்து மலைபோலக் கனத்துள்ள இரண்டு கொங்கைகளின் மீது கலக்கங் கொள்ளும் மோக வெறியில் மயக்கங் கொள்ளாமல் - I سمي ஒருமை அடைதலில் (ஒருவரிப் படுதலில்) விருப்ப உணர்ச்சி (என்) மனத்தில் உண்டாகும்படி (உனது) திருவுள்ளத்தில் நினைத்தருளி உன்னைப் புகழ்ந்து பாடும் என்னை இப் பூமியில் ஒருவனாம் படியான வகையை உனது திருவருளாலே -