பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/418

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 முருகவேள் திருமுறை 13. திருமுறை 'ஒருத்தனாம் வகைதிரு வருளாலே. உணர்த்து நா ளடிமையு முடையேனோ; பருத்ததோ கையில்வரு முருகோனே. பரக்கவே யியல்தெரி வயலுTரா; திருத்தமா தவர்புகழ் குருநாதா. திருக்கைவே லழகிய பெருமாளே 174. திருவடி பெற தனதனன தத்த தான தன தனண தத்த தான தனதனன தத்த தான தனதான கலைகொடு பவுத்தர் காம கருமிகள் துருக்கர் மாய 'கபிலர்பக ரக் கணாதர் "உலகாயர். கலகமிடு தர்க்கர் 'வாம பயிரவர் விருத்த ரோடு கலகலென மிக்க நூல்க ளதனாலே; 1. இவ்வேண்டுகோளை 113,563 - பாடல்களிலும் காண்க. முருகன் கடைக்கண் இயலையும், அயிலையும், மயிலையும் நினைத்திருந்தால் ஒருவன்" - ஆகலாம். (கடைக்கணியல் வகுப்பு) 2. கருமி - " தன் சாதி கருமமே பற்றி முத்தனாமவன் கருமி." (வேதா.சூ.14) 3. மாயா வாதத்தினர் - பிரபஞ்சம் யாவும் மாயையே யென்று கூறுங் கொள்கையர் - (உதாரணம்: அத்துவைத மதம்). 4. கபிலர் - கபிலரால் தாபிக்கப்பட்ட சாங்கிய மதத்தினர். சாங்கிய மதம்-தத்துவங்கள் இருபத்தைந்து எனக் கணக்கிடுவதான ஒரு சமயம் மணிமேகலை -27-202) 5. கணாதர். கணாதன் என்னும் முநிவரால் தாபிக்கப்பட்ட வைசேடிக மதத்தினர் (மணிமேகலை 27-79) 6. உலகாயர் - இவர் சார்வாக மதத்தினர்; சார்வாகம் காட்சியே அளவை யாவதென்றும், நிலம், நீர், தீ, வெளி எனப் பூதம் நான்கே என்றும், அவற்றின் சேர்க்கையால் தோன்றிப், பிரிவதால் மாய்வதாய், அறிவு வெளிப்பட்டழியு மென்றும், மறுமையென்பது இல்லை என்றும் சரீரமே ஆன்மா என்றும், கடவுள் இல்லை என்றும், இன்பமும் பொருளுமே புருஷார்த்தங்களென்றும் சொல்லும் உலோகாயத மதம். 7, 8, பக்கம் 403 பார்க்க