பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/427

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி) திருப்புகழ் உரை 411 சூரியன், சந்திரன், அக்னி - என்னும் முச்சுடர்களையும் (மூன்று) கண்களாகக் கொண்ட் சிவனுடைய இடது பாகத்தில் உள்ள ஒப்பற்ற பர்வத ராஜனது அழகிய மகள், (தனது) வடிவம் மேகம்போன்ற் திருமாலின் தங்கை - அருளிய குமரனே! பரம்பொருளான கணபதி (தனது) அருகே மதயானை உருவு கொண்டு வர, உடனிருந்த குறமகள் (வள்ளி) (நீயே) அபயமென்று உன்னை அணையப்பெற்ற பெருமாளே! பழநியில் வீற்றிருக்கும் பெருமாளே! (எனது தலை பதம் அருள்வாயே!) 177 கூந்தலானது காடு மேகம், பொழில்; வீரம் வாய்ந்த வில். நெற்றி, குமுதமலர் (செவ்வாம்பல்) - வாயிதழ்; பற்கள். முத்து: மகர மீன்போன்ற குழையை அணிந்த செவி - வள்ளைக் கொடித் தண்டு; மொழி - குயிலும் அமுதமும்; கொங்கை தாமரை மொட்டும், மலையும், சூதாடு கருவியும்; கண்கள் - கயல் மீன்,வேல், அம்பு, கடல், கருவிகளை (காக்கணம், காக்கட்டான். பூ), குவளை மலர், விஷம்: -என்றெல்லாம் உவமை கூறி நாயடியேனாகிய நான் - மிகவும் பெண்களைப் பயனற்ற வழிகளிற் புகழ்ந்து வீணாக உள்ளம் துக்கப்படலாமா! பண்ணின_வினைகள் கழல (நீங்கி ஒழிய), வீரக் கழல் ஆதிய பணிகளை (ஆபரணங்களை) அணிந்துள்ள (உனது) திரு வடியைப் பணிய அருள்புரிவாயாக, மயில் வீரனே! (அல்லது உனது திருவடியைப் பணிய அருளின மயில் வீரனே!) இலக்குமியின் திருமருகனே! (கிரெளஞ்சம், எழுதிரி என்னும்) மலைகளில் இருந்த அசுரர்கள் உக (அழிய) அந்த மலைகளைத் தொள்ை செய்த ஒளி வேலன்ே; يا