பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி) திருப்புகழ் உரை 453 விரிந்து வளர்ந்த தென்னங் குரும்பைகள் (இளநீர்) என்னும் படி ஓங்கி விளங்கும் பொன்மயமாய் நிரம்பும் மேருமலை போல் அதிகக் காமம் பொதிந்து ஓங்கின அழகிய கொங்கை கொண்டு, முன்னுள்ள (ஒரு விருப்பத்தை நிறைவேற்ற விரும்பி (அல்லது எதிர்க்கும் காமப்போரை விரும்பி) இன்பத்துடனே, அன்னப் பறவைபோல, விதம்விதமான நடை நடப்பவராய்த் தெருவிலே வந்து எல்லோருடைய உள்ளத்துக் காம மயக்கையும் (கொள்ளை) கொள்ளும் (பொது) மகளிரின், கண் என்னும் வலையால் - என்னுடைய மனமும் வாடிப் போகாத வகைக்கு (நீ) j ரிந்து அழகான (உனது) தாமரை போன்ற இரண்டு '! என்னை ஆண்டருளும் ஒரு நாளும் உண்டோ! ஆணவம் மிக்கு எதிரில் வந்து சன்டை செய்த சூரனுடைய உடல் இரண்டு கூறாக விழும்படி கோபாவேச ரூபத்தைக் கொண்ட வேலாயுதத்தைச் செலுத்தின அதிதிரனே! மிக இனிமை வாய்ந்த சொல்லை உடையவள், உமை மாது, நாரணி, கவுரி, அம்பிகை, யாமளை (சியாமள நிறத்தை ஒருவகைப் பச்சை நிறத்தை உடையவள்), பார்வதி, மெளன சுந்தரி, காரணி, யோகினி . (எனும் ரு நாமங்கள் வாய்ந்த தேவியின்) பிள்ளையே! ஏற்ற சமயத்தில் (சமயங் கண்டு) ஏழு லோகங்களையும் வலம் ஒரு நொடிப் பொழுதில் வந்த், அழகிய மயிலின்மேல் ஒப்பற்ற திருவுலா வந்த, கிருபாகரனே! பராக்ரமனே! வெற்றி வீரனே! சூரியனது ஒளி கோடிக் கணக்கதாமெனும் திருவுருவத்தைக் கொண்ட i (பெருமாளே)! ಸ್ಥಿ தலத்தினும் சிறந்த jಫ# வீற்றிருக்கும் பெருமாளே! (எனை ஆள்வதும் ஒரு நாளே!)