பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பரங்குன்றம் திருப்புகழ் உரை 31 5 (நான்) உன்னைத் தினந்தோறும் தொழுவதும் இல்லை; உன்னுடைய தன்மைகளை (எடுத்து) உரைப்பதும் இல்லை; பல மலர் கொண்டு உன் அடியிணை பொருந்தப் பணிவதும் இல்லை; ஒரு வகையான தவமும் (செய்தேன்) இல்லை; உன்னுடைய அருள் நீங்காத == உள்ளத்தை உள்ள அன்பர்கள் உறையும் இடத்தை அறிகின்றதும் இல்லை; விருப்பத்தோடு உன் மலையை வலம் வருகின்றதும் இல்லை; மகிழ்ச்சியுடன் உன் புகழைத் துதிக்க விருப்பங் கொள்வதும் இல்லை; மலைபோலத் (தோன்றிக்) - கனைத்துக் கொண்டு வருகின்ற எருமையின் கழுத்தின்மீது வருகின்ற கரிய நிறமும், கொடுங்கோபமுமுள்ள யமனிடம் உள்ளவர்கள் (என்முன்) தோன்றி நெருங்கி எறிகின்ற கயிறு கொண்டும் வருத்தும் கதை கொண்டும் (என்னுடன்) போர் செய்கின்ற போது கலக்கமுறுஞ் செயலும், ஒய்தலின்றி அழிவுறும் கருத்தும் நைந்துபோய்(நான்)துன்புறும்போது ஒரு கண அளவில், என் பயம் நீங்க மயில் முதுகினில் (நீ) வருவாயாக; போர்க்களத்தில் பேய்கள் கூத்தாடுவதால் ஊன் (மாமிசம்) உடைந்து (பிணங்களின்) உடலினின்றும் சிதறச் சிதறின. மாமிசத்தைக் கழுகுகள் உண்ண, விரித்த தலைமயிரை உடையவர்' என்னும் அசுரர்களோடு போர் புரிந்த வேலனே! மிக்க பண்களைப் பயிலும் குயிலின் மொழி போன்ற மொழியை உடையாளும் அழகிய மலைநிலத்துப் பெண்ணுமாகிய (வள்ளியின்) குங்குமம் அணிந்த முலைமீது அழுந்திப் படும் நறுமணங் கலந்த சந்தனமும் கக் காரியும் (அணிந்த புயலைகளை பவனே!