பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/528

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம்) திருப்புகழ் உரை 55 ஒலிக்கும் கடல்களே அதிர்ந்து வருவது போலக் (காவிரியா று வந்து)- விளங்கும் குருமலையின் (சாமிமலையின்) மீது வீற்றிருக்கும் பெருமாளே. (ஆள அன்பு தருவாயே) 218 தெருவில் நடக்கும் மாதர்கள் ஒன்றுகூடி மகிழ்ந்து பேசும் பழிப்புச் சொல்லாலும் - சூரியன் என்னும்படி கடலிற் சிவந்த நிறத்துடன் உதிக்கின்ற நிலவாலும் - பொருதற்குச் (சண்டை செய்ய) வில்லை வளைத்துச் சோர்வு இல்லாமல் மன்மதன் செலுத்துகின்ற பாணங் களாலும் - S புளகாங்கிதம் கொள்ளும் கொங்கையையுடைய இவள் (நாயகி) வருந்தி மனம் சோர்வு அடையலாமா! ஒப்பற்ற (கிரவுஞ்ச) கிரி இரண்டு கூறுபட (அதன்) வலிமையான பாகத்திற் புகவிட்ட கூரிய வேலனே! புகழ் மிகுந்தோங்கும் திருவேரகத்தில் (சாமிமலையில்) மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கும் முருகனே! }. விரக தாபங் கொண்டாரை - காம நோய் கொண்டாரை வருத்துவன. (1) நிலவு - (சந்திரனை வெறுத்துப் பழித்தல் - சந்தி ரோபாலம்பணம்) (2) மன்மதன் (மன்மதனைப் பழித்தல் - மன்மதோபாலம் பனம்) (3) தென்றல் (4) குயில் கூவுதல் (5) கோழி கூவாதிருத்தல் (கோழிகவினால் பொழுது விடியும். காம நோய் குறையும்) (6) சூரியன் உதியாமை (7) அன்றிலின் ஒலி (8) கடல் ஒலி (9) விடைகளின் மணி ஓசை (10) நாரியர் (ஊர்) வசை (மொழி) (11) குழல் ஓசை முதலிய, நிலவு, மன்மதன், குயில், கடலொலி, குழலொலி, விடையின் (சேயின்) மணி, ஊர்ப்பேச்சு, தாயர் வசை - இவை வருத்தும் என்பதைத் திருப்புகழ் 145ஆம் பாடலிற் காண்க "செழுந்தென்றல் அன்றில் இத் திங்கள் கங்குல திரை வீரை தீங்குழல் சேவின் மணி எழுந்தின் றென் மேல் பகை யாட வாடும் எனை நீ நலிவ தென்னே என்னும்," திருவிசைப்பா, (வீரை - கடல்; சே - விடை)