பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/530

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம்) திருப்புகழ் உரை 57 அருமறையான வேதப் பொருளைத் தமிழ் நூல் முறையிலே உணர்ந்து உரைத்த புலவனே! இந்திரன், திருமால், பிரமன் ஆகியோர் தம் கால் விலங்கை அவிழ்த்து (உதவின) பெருமாளே! (மனம் சலித்தும் விடலாமோ) 219 கேடு செய்பவருடைய (கேடு செய்யுங் கீழ் மக்களுடைய) இடங்களிற் சென்று (அவருடன்) கலந்து, (அதனால்) மிகவும் நொந்து, தடுமாற்றம் அடைந்து, (நல்ல) அறிவு கெட, ம் தவறான (நெறியில்) விழுந்து, ஆழமாக (த் தி ధౌ அழுந்தி, (நான்) மெலிவு உறாமல் - சிறந்த உலகு (எலாம்) தொழுகின்ற உனது புகழ் (வெள்ளத்தில்) ஒரு சொல் அளவுப் பகுதியையாவது கூறி (அந்நற்பணியின் ப்யனாய்) சுகநிலையை அடைந்து நல்ல மணம் வீசும் (உனது) இரு தாமரைத் திருவடிகளை (மனம் ஒருப்பட்டு) நின்று பணிய மாட்டேனோ! உபதேச வாசகத்தை (மொழியை) நீ சொல்ல, சிவபிரான் மெச்சிப் புகழ்ந்த குருமூர்த்தியே! இந்திரன் போற்றி வளர்த்த லட்சுமியாம் ப்பற்ற தெய்வயானையின்பால் அன்பு காட்டி ரங்கிய மணவாளனே! மூங்கில், தேவதாரு அல்லது கற்பகம் (தென்னை), ಕ್ಲಿ மரம், மாமரம், அத்திமரம், சந்தனமரம் இவை பக்கங்களிற் சூழ்ந்துள்ளதும், திருமால் போற்றிப் பரவுகின்றதுமான குருமலையில் (சாமிமலையில்) * யோக நிலையில் அமர்ந்தருளும் பெருமாளே! (இரு கமல பாதத்தை நின்று பணிவேனோ)

  • ս « "וץ. ייא") "ישதலின் யோக நிலை.