உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/538

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம்) திருப்புகழ் உரை 65 பாம்பை அணையாகக் கொண்ட திருமால் மனங்குழைந்து அன்பு செய்யும்(அல்லது பாம்பைப் பொருந்திய குழையாக உடைய) பரசிவன்,வேதம் (போற்றும்) அரன், (எனப்படும் பெருமானுடைய) இடது பாகத்தில் உறைகின்ற சோதி அம்மை, உமை, டாகினி, திரிபுரை (திரிபுரத்தை எரித்தவள்) நாரணி, அழகிய மாது (பார்வதி) அருளிய புதல்வனே! o குராமலரை அணிகின்ற அணிகலமாகக் கொண்டவனே! சரவணனே! குரு மூர்த்தியே! குகனே! கருணாநிதியே! தேவர். களுக்கு ஈசனே! -- குறமகள் (வள்ளி), ஆனை (ஐராவதம் வளர்த்த) மின் போன்ற தேவசேனை (இருவரும்) சேர்ந்துள்ள முழுப்பொருளே! குருகிரி சாமிமலையில் வீற்றிருக்கும் பெருமாள்ே: (மயல் நிலையெழ அலைவது ஆமோ) 224 பல பேர்களுடைய காதலைப் பெற்றிருந்தும், ஒரு நாழிகைப் பொழுதுக்குள் ஒரு பலனைப் ப்ெறவேண்டி (அதற்காகச்) சூழ்ச்சி செய்யும் களவுச் செயலால் பல பேர்களை மெச்சி வருகின்ற தொழில்களையே நடத்தி, உடல் பதறுதலில்லாமல், வெட்கம் அற்ற வகையிற் பேசி (இயற்கையில்) நீங்காத லஜ்ஜை (நாணம்) தணிந்த குறை பட்ட) மலைபோன்ற கொங்கையை உடைய பொது மகளிர் . தங்கள் தொழிற் சாமர்த்தியங்கள் மிகவும் செய்பவர்கள். தங்கள் (சூழ்ச்சித்) தொழில்களால் மும்மூர்த்திகளுக்கும் மூத்தவள், மூன்று நாடிகளிலும் இருப்பவள் எனப் பலவாறு பொருள் கொள்வர். (அபிராமி அந்தாதி - வித்வான் பிரம்மபூரீ கி. வா. ஜகந்நாத ஐயரவர்கள் உரை - பக்கம் 5, 17 - பார்க்க)