பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/565

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை திரைகள் போலலை மோதிய சிதள குடக காவிரி நீளலை சூடிய திரிசி ராமலை மேலுறை வீரகு றிஞ்சிவாழும், மறவர் நாயக ஆதிவி நாயக ரிளைய நாயக காவிரி நாயக வடிவி னாயக ஆணைத னாயக எங்கள்மானின். மகிழு நாயக தேவர்கள் நாயக கவுரி நாயக னார்குரு நாயக வடிவ தாமலை யாவையு மேவிய தம்பிரானே. (3) 236. உபதேசம் பெற தந்தன தான தான தந்தன தான தான தந்தன தான தான தனதான வஞ்சக லோப மூடர் தம்பொரு ஞர்கள் தேடி மஞ்சரி கோவை தூது பலபாவின். வண்புகழ் "பாரி காரி யென்றிசை வாது கூறி வந்தியர் போல வீணி லழியாதே செஞ்சர ணாத கீத கிண்கிணி நீப மாலை திண்டிறல் வேல்ம யூர முகமாறும்.

  • பாரி, காரி. கடையெழு வள்ளல்களிலிருவர்.

பாரி - முல்லைக் கொடிக்குத் தேர் கொடுத்த வள்ளல் - சிறுவி முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய... பாரி" (சிறுபாணாற்றுப் படை 89.91). கொடுக்கிலா தானைப் பாரியே என்று கூறினுங் கொடுப் பாரிலை" சுந்தரர் - புகலூர்த் தேவாரம். காரி " ஈர நன்மொழி இரவலர்க்கு ஈந்த " நெடுவேற் கழ றொடித் தடக்கைக் காரி" - (சிறுபாணாற்றுப்படை 93 - 95). t வந்தியர் . புகழ்ந்து கூறுவோர்.