பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 முருகவேள் திருமுறை (1 திருமுறை 10. அன்பு உற சந்ததம் பந்தத் தொடராலே சஞ்சலந் துஞ்சித் திரியாதே கந்தனென் றென்றுற் றுனைநாளும் கண்டுகொண் டன்புற் றிடுவேனோ? 'தந்தியின் கொம்பைப் புணர்வோனே சங்கரன்பங்கிற் சிவைபாலா! செந்திலங் கண்டிக் கதிர்வேலா! தென்பரங்குன்றிற் பெருமாளே (10) 11. தொண்டு செய தடக்கைப் பங்கயங் கொடைக்குக் கொண்டல்தனன் டமிழ்க்குத் தஞ்சமென் றுலகோரைத் தவித்துச் சென்றிரந் துளத்திற் புண்படுந் தளர்ச்சிப் பம்பரந் தனையூசற் கடத்தைத் துன்பமண் சடத்தைத் துஞ்சிடுங் கலத்தைப் பஞ்சஇந் த்ரியவாழ்வைக் கணத்திற் சென்றிடந் திருத்தித் தண்டையங் கழற்குத் தொண்டுகொண் டருள்வாயே! படைக்கப் பங்கயன் துடைக்கச் சங்கரன் புரக்கக் கஞ்சைமன் பணியாகப் பணித்துத் தம்பயந் தணித்துச் சந்ததம் பரத்தைக் கொண்டிடுந் தனிவேலா!