உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/580

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று கயிலை மலை திருப்புகழ் உரை 107 242 இந்தப் பூமியிற் ப்ரபுவாக (அரசாகத் தோன்றிய சீகாழித் தலத்து ஞான சம்பந்தப் பெருமான் போல அமுதமே இது என்று சொல்லத் தக்க கவிமாலையைப் பாடுதற்கு அடிமையாகிய எனக்கு அருள் பாலிப்பாயாக போரில் எதிர்த்து வந்த அசுரர்கள் மாளும்படி ஒப்பற்ற வேலாயுதத்தைச் செலுத்தி அருள்வோனே! "நமசிவய" என்னும் ஐந்தெழுத்தின் மூலப்பொருளா யுள்ளவனே! வெள்ளியங்கிரி (கயில்ைமலைப்) பெருமாளே! (அமர்தகவி பாட அருள்வாயே) 243 முகத்தை நன்றாக ஒழுங்கு செய்து அலங்கரித்து, மிகவும் மினுக்கித் தொடைத்து, ரத்னமயமான கொங்கைக் கச்சை (ரவிக்கையை) அவிழ்த்து, அசைத்து, சற்றேனும் பின் வாங்காமல் (சற்றேனும் மனம் சலிக்காமல்) மயும் (நன்றாகக்) கழப்பியும் (காலம் போக்கியும்), வஞ்சித்தும், மழுப்பியும் (தாமதப்படுத்தியும், ஏமாற்றியும்), (வந்தவர்களிடம்) பொருளைப் பறித்து, (அவர்களைத்) தங்களுடைய பேச்சில் மயக்கி உட்படவைத்து, அழைத்துக் கொண்டு போய்ப் படுக்கையின் மேலே சிரிப்புடனே அணைத்து முத்தமிட்டு மகிழ்ந்து மிகுந்த பக்குவத் துடனே கழுத்தை அழுந்த அணைந்து கொள்ளும் மாதர்களுக்கு முன் பக்கத் தொடர்ச்சி பக்கம் 400) எதிர்த்த சுர்-எதிர்த்த சூர், சூர்-சூரண் S ரசதகிரி வெள்ளியங்கிரி,