உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/615

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை சிறப்புறப் பிரித்தறத் திறத்தமிழ்க் குயர்த்திசைச் சிறப்புடைத் திருத்தணிப் பெருமாளே (7) 256. திருவடியைத் தொழ தனத்தன தானம் தனத்தன தானம் தனத்தன தானம் தனதான எனக்கென யாவும் படைத்திட நாளும் இளைப்பொடு காலந் தனிலோயா. எடுத்திடு காயந் தனைக்கொடு மாயும் இலச்சையி லாதென் பவமாற; உனைப்பல நாளுந் திருப்புக ழாலும் உரைத்திடு வார்தங் குளிமேவி. உணர்த்திய போதந் தனைப்பிரி யாதொண் பொலச்சர னானுந் தொழுவேனோ, வினைத்திற மோடன் றெதிர்த்திடும் வீரன் விழக்கொடு வேள்கொன் றவனியே. விளப்பென மேலென் றிடக்கய னாரும் விருப்புற வேதம் புகல்வோனே; சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின் சிரத்தினை மாறும் முருகோனே. திணைப்புன மேவுங் குறக்கொடி யோடுந் திருத்தணி மேவும் பெருமாளே. (8)