பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/625

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை கருகிய காளம் பெருகிய தோயங் கருதலை யாலுஞ் 'சிலையாலுங், கொலைதரு காமன் பலகனை யாலுங் கொடியிடை யாள் நின் றழியாதே. குரவணி நீடும் புயமணி நீபங் குளிர்தொடை நீதந் தருள்வாயே! tசிலைமகள் நாயன் கலைமகள் நாயன் திருமகள் நாயன் தொழும்வேலா. திணைவன மானுங் #கநவன மானுஞ் செறிவுடன் மேவுந் திருமார்பா, தலமகள் மீSதெனன் புலவரு லாவுந் - தணிகையில் வாழ்செங் கதிர்வேலா 'சிலை ஆலும் - வில்லினிடத்து அசைகின்ற tதிருத்தணிகையில் (1) சிவன் முருகரைத் தியானித்து உபதேசம் பெற்றனர். (திருப்புகழ் 264); அவரது ஆலயம் (வீராட்ட காசர் ஆலயம்) தணிகையில் நந்தியாற்றுக்கு வட கரையில் உள்ளது. அபராசிதவர்மன் (திருத்தணி கோயில் About 890 A D) கோயிலைக் கட்டினவன் - நம்பி அப்பி, Inscriptions 433 of 1905, "திருந்து திருத்தணியிற் செஞ் சடையீசற்குக", கருங்கல்லாற் கற்றளியா நிற்க, விரும்பியே நற்கலைகளெல்லாம் நவின்றசீர், நம்பியப்பி பொற்பமையச் செய்தான் புரிந்து" உபதேசித்த சாமிநாதர் ஆலயம் (ஆறுமுக சுவாமி கோயில் என வழங்கும் ஆலயம்) நந்தியாற்றுக்குத் தென் கரையில் உள்ளது (2) திருமால் முருகரை வழிபட்டுத் தாரகா சுரனாற் கவரப்பட்ட தமது சக்கரம், சங்கு முதலியவற்றைப் பெற்றார். விட்டுணு தீர்த்தம் மலைமேல் கோயிலுக்கு மேற்கே குருக்கள்மார் வீடுகளின் எதிரில் உள்ளது. (3) பிரமன் முருகரை வழிபட்டு சிருட்டித்தொழில் செய்யும் ஆற்றலைப் பெற்றனன். மலைமேல் ஏறிப்போகும் வழியில் பாதி துரத்திற் பிரமசுனையும் பிரமேசர் ஆலயமும் உள்ளன. இங்ங்ணம் மும்மூர்த்திகளும் திருத்தணிகையில் வழி பட்டதை இங்கு அருண கிரியார் குறித்துள்ளார். (அடுத்தபக்கம் பார்க்க)